என்கிட்ட வச்சுக்காத.. வகுந்து கையில கொடுத்துடுவேன்.. சனம் ஷெட்டியை வெளுத்துவிட்ட சுரேஷ்!

சென்னை: முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும் பேசிய சனம் ஷெட்டியை சுரேஷ் சக்கரவர்த்தி வெளுத்து வாங்கினார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Day 15 Highlights | Nominations

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே எல்லோரிடமும் எதற்கெடுத்தாலும் பிரச்சனை செய்து வருபவர் நடிகை சனம் ஷெட்டி.

ஒன்றும் இல்லாத பிரச்சனைக்கெல்லாம் தேவையில்லாமல் பேசி பெரிதாக்கி எல்லோரையும் டென்ஷன் செய்து வருகிறார்.

இந்த வாரமும் எஸ்கேப்

இந்த வாரமும் எஸ்கேப்

இதனாலேயே கடந்த வாரம் அதிகம் பேர் அவரை நாமினேட் செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
பால் போடும் டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் இந்த வாரமும் நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

அது முடியும் இது முடியாதா?

அது முடியும் இது முடியாதா?

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சுரேஷிடம் துணி துவைக்கும் விவகாரத்தில், நாம் ஃபிரண்ட்ஸ் என்னை விலக்கி வைக்காதீர்கள் என்று கூறிவிட்டு உள்ளே ரியோவிடம் பாத்ரூம் கழுவ முடியும், ஆனால் துணி துவைக்க முடியவில்லையா என கேட்டார்.

உனக்கு எவ்ளோ நக்கல்

உனக்கு எவ்ளோ நக்கல்

இதனை கேபி, சனத்திடம் கேட்ட கையோடு சுரேஷிடமும் சென்று கூறினார். பின்னாலேயே வந்த சனம், சுரேஷ் அண்ணா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைதானே, நீங்கள் ஓகேதானே என்று கேட்டார். ஏற்கனவே சனம் அவரை பற்று பேசியது தெரிந்ததால் கடுப்பான சுரேஷ், பாத்ரூம் கழுவ முடியும் போது துணி துவைக்க முடியாத என்று கேட்டிருக்கிறாயே உனக்கு எவ்ளோ நக்கல் என்றார்.

பர்சனலில் தலையிடாதே

பர்சனலில் தலையிடாதே

மேலும் பாத்ரூம் கழுவுவது என் இஷ்டம், துணி துவைப்பது என் இஷ்டம்.. என்னிடம் ஃபிரண்ட் என்று கையெல்லாம் கொடுத்துவிட்டு, முதுகில் குத்துகிறாய்.. உன்னுடன் எதுவும் தேவையில்லை. என் பர்சனலில் தலையிடாதே.. தலையிட்டால் வகுந்து கையில கொடுத்துடுவேன்.

என் டீமில் வேண்டாம்

என் டீமில் வேண்டாம்

என்கிட்ட மட்டும் பிரச்னை பண்ணா பரவாயில்லை.. எல்லார்கிட்டேயும் பர்சனலா ஏதாவது கேட்டு பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறாய். என் விஷயத்தில் தலையிடாதே என பொட்டில் அடித்தாற் போன்று கூறினார். அதனை தொடர்ந்து இந்தப் பிரச்சனையை ரியோவிடம் கொண்டு சென்ற சனம் ஷெட்டி, அவர் என் டீமில் வேண்டாம் என்றார்.

முதுகில் குத்துகிறார்

முதுகில் குத்துகிறார்

மேலும் என்னை மிரட்டினார், என்னை எதிரியை போன்று பார்ப்பவருடன் என்னால் வேலை பார்க்க முடியாது என்றார். ரியோ விசாரித்த போது நடந்ததை கூறிய சுரேஷ், எல்லோருடைய பர்சனலிலும் தலையை விடுகிறார் முதுகில் குத்துகிறார் என பளிச்சென கூறினார்.

சனம் கோபம்

சனம் கோபம்

அப்போது பேசிய சனம் முதுகில் குத்தியது நான் இல்லை, கேபிதான், என் இமேஜை ஸ்பாயில் பண்ணாதீர்கள் என்றார். அதற்கு ரியோ, அவர் வேலை எல்லாம் செய்ய முடியாது என்று சொல்ல மாட்டார், துணி துவைப்பது அவருடைய பர்சனல் அதில் நீ தலையிடாதே என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X