விஜய் ஸ்ரீஜி இயக்கும் “தளிர்”.. புத்தாண்டில் முதல் பாடலுடன் புது அதிரடி!
சென்னை: ஹரா, பவுடர் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் தனித்துவமான அடையாளத்தை பெற்ற இயக்குநராக விஜய் ஸ்ரீ ஜி இருக்கிறார். தற்போது இவர் தளிர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தளிர்: தமிழ் சினிமாவில் திரைக்கதை முக்கியத்துவம் மீண்டும் பேசப்படும் நேரத்தில், புதிய அரசியல், உணர்ச்சி வடிவக் கதையுடன் உருவாகி வரும் "தளிர்" திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை இயக்குவது விஜய்ஸ்ரீஜி, திரை உலகில் சமூகப் பின்னணியுடனான கதைகளை வலுவாக சொல்லும் திறனுக்குப் பெயர்பெற்றவர். இப்படத்தில் சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் போஸ்டரை பார்க்கும் போது, சுரேசை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனல் கதையாக தளிர் திரைப்படம் உருவாகி வரும் இத்திரைப்படம் கோடை விடுமுறையில் தியேட்டரில் வெளியாக உள்ளது.

முதல் பாடல்: இப்படத்தில் அனித்ரா, விஜய் டிவி தீபா, சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீஜி, ரசாந்த் அர்வின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஸ்கோப் இருக்கும் வகையில் கதை பின்னப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் இருந்து முதல் பாடல் வரும் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











