பிக்பாஸ் சீசன்லேயே தரமான போட்டியாளர்ன்னா இவர்தான்.. இந்தியளவில் ட்ரெண்ட்டான சுரேஷ் சக்கரவர்த்தி!

சென்னை: பிக்பாஸ் புரமோவை தொடர்ந்து போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 8 பெண் போட்டியாளர்கள், 8 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஜீ தமிழ் சேனலின் தொகுப்பாளரான அர்ச்சனா நேற்று உள்ளே சென்றார்.

இன்ட்ரெஸ்டிங் கன்டெஸ்ட்டன்ட்

இன்ட்ரெஸ்டிங் கன்டெஸ்ட்டன்ட்

கடந்த மூன்று சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி ரொம்பவே சுவாரசியமாக உள்ளது. குறிப்பாக போட்டியாளர் சுரேஷ் சக்கவர்த்தி படு சுவாரசியமான நபராக உள்ளார். பல படங்களில் நடித்துள்ள சுரேஷ் சக்கரவர்த்தி சிறந்த சமையல் கலைஞரும் ஆவார்,

மகனுக்கு புற்றுநோய்

மகனுக்கு புற்றுநோய்

வசதியான குடும்பத்தில் பிறந்து, எல்லாவற்றையும் இழந்து, அண்ணனின் ஆதரவில் மீண்டும் எழுந்து வந்தவர். காலித்து திருமணம் செய்து ஒரே மகனை பெற்றார். மகனுக்கு 16 வயதில் இரத்த புற்று நோய் என்று அறிந்து விரக்தியடைந்த சுரேஷ் சக்கரவர்த்தி, எமனுடன் போராடி மகனை மீட்டுள்ளார்.

விரைவில் தாத்தா

விரைவில் தாத்தா

புற்று நோயிலிருந்து குணமான மகன் மூலம் விரைவில் தாத்தாவாக உள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள எல்லோரின் முகத்திரையும் கிழிந்துள்ள நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் மக்களின் மனதில் ஸ்ட்ராங்காக சம்மணம் போட்டு அமர்ந்துள்ளார்.

மனதில் வைத்துக்கொள்ளாமல்..

மனதில் வைத்துக்கொள்ளாமல்..

எல்லாவற்றையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் அவருடைய குணம் பலரையும் வியக்க வைத்துள்ளது. வயதில் குறைந்தவர்கள் இன்சல்ட் செய்யும் போது கூட அதனை மனதில் வைத்துக்கொள்ளாமல் எல்லோர் மனதையும் வென்று வருகிறார்.

தலைவர் பதவிக்கு..

தலைவர் பதவிக்கு..

அந்த வகையில் இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது முதல் புரமோவின் மூலம் மீண்டும் மக்கள் மனதில் உச்சத்துக்கு சென்றுவிட்டார் சுரேஷ். அதாவது பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கான போட்டி நடைபெறுகிறது.

கேபிக்கு ஆதரவு

கேபிக்கு ஆதரவு

இதில் கேபி, ரியோ மற்றும் வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களில் கேபிக்கு சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் ஆதரவு கொடுக்கிறார். ரியோவுக்கும் வேல்முருகனுக்கும் பலரும் ஆதரவு கொடுத்தனர்.

வெளியேறும் கேபி

வெளியேறும் கேபி

ஆதரவு கொடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள் போட்டியாளர்களை உப்பு மூட்டை சுமக்க வேண்டும். அதன்படி ஒற்றையாளாக கேப்பிரியல்லாவை வேற்க விறுவிறுக்க உப்பு மூட்டை சுமக்கிறார் சுரேஷ் சக்கவர்த்தி. ஒருக்கட்டத்தில் வேண்டாம் தாத்தா என்று கூறி கேபியே போட்டியில் இருந்து விலகினார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

பின்னர் சாரி தாத்தா என சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டிப்பிடித்து கதறுகிறார். பார்க்கும்போதே செம செண்டிமெண்ட்டாக இருக்கும் இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை, கொண்டாடி வருகின்றனர்.

தரமான போட்டியாளர்

தரமான போட்டியாளர்

மேலும் #SureshChakravarthy என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களிலேயே தரமான அனைவரின் மனதையும் கவர்ந்த போட்டியாளர் என்றால் அது சுரேஷ் சக்கரவர்த்திதான் என்றும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இந்திய அளவில் ட்ரெண்டிங்

இந்திய அளவில் ட்ரெண்டிங்

#SureshChakravarthy என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ரொம்பவே எமோஷனலாக உள்ள இந்த புரமோவும் லைக்ஸ்களை குவித்து வருகிறது. டாஸ்க்கில் அவர்கள் வெற்றி பெறாவிட்டாலும் மக்களின் இதயங்களை வென்று விட்டார்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X