Kavita chaudhary : சர்ஃப் எக்ஸல் விளம்பர புகழ் கவிதா சௌத்ரி காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பிரபல மாடல், நடிகை, தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் செயல்பட்டு வந்த நடிகை கவிதா சௌத்ரி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 67 வயதான கவிதா சௌத்ரி கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. 1989ம் ஆண்டுகளில் சூப்பர்ஹிட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உதான் நிகழ்ச்சியில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து புகழ் பெற்றவர் கவிதா சௌத்ரி. சர்ஃப் விளம்பரங்களிலும் நடித்து அதன்மூலமும் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் இவர்.

நேற்றைய தினம் அமிர்தசரஸின் பார்வதி தேவி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்த கவிதா சௌத்ரி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 1989 முதல் 1991 வரை ஒளிபரப்பான உதான் தொடர், கடந்த 2020ம் ஆண்டில் நாடு தழுவிய லாக்டவுனின்போது தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை கவிதா சௌத்ரி எழுதி இயக்கியிருந்தார். இதில் முக்கியமான கேரக்டரிலும் நடித்திருந்தார். பெண்களின் அதிகாரம் குறித்த முதல் இந்திய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

Surf Excel famous model and Actress Kavita chaudhary passed away due to ill health

நடிகை கவிதா சௌத்ரி: நடிகை கவிதா சௌத்ரி 1990களில் மிகப்பிரபலமான நடிகை, தயாரிப்பாளர் மற்றும் மாடலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது சர்ஃப் எக்ஸல் விளம்பரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச்சானது. இதில் லலிதாஜி என்ற கேரக்டரில் இவர் சர்ப் எக்ஸல் விளம்பரத்தில் பேசுவார். அந்த அளவிற்கு அவரது பேச்சில் கான்பிடன்ஸ் காணப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த விளம்பரத்தை பார்த்தே ஏராளமானோர் இந்த பவுடரை வாங்கினார்கள். அந்த அளவில் இந்த விளம்பரத்தை கொண்டு சென்ற கவிதா சௌத்ரி, உதான் என்ற நிகழ்ச்சி மூலமாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

மாரடைப்பால் காலமானார்: ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கவிதா சௌத்ரி உடல்நலக்குறைவு காரணமாக அமிர்தசரஸின் பார்வதி தேவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிந்தார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கவிதா சௌத்ரி, தற்போது மாரடைப்பால் காலமாகியுள்ளார். அவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறை பிரபலங்கள் இரங்கல்: கவிதாவின் நெருங்கிய தோழியான சுசித்ரா வர்மா, சிறிது காலத்திற்கு முன்பு தான் கவிதாவை சந்தித்ததாகவும் புற்றுநோய் காரணமாக கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்பு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இவ்வளவு சீக்கிரத்தில் அவர் உயிரிழப்பார் என்று தான் கருதவில்லை என்றும் கூறியுள்ளார். தன்னுடைய இதயம் கனப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு வலிமை மற்றும் உத்வேகம் ஆகியவற்றின் விளக்கை இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்முகத் திறமை: கடந்த 1970 முதல் 90 காலகட்டங்களில் உதான் நிகழ்ச்சி மூலமாகவும் சர்ஃப் எக்ஸல் விளம்பரம் மூலமாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் கவிதா சௌத்ரி. கடந்த 1989 முதல் 1991ம் ஆண்டுவரை உதான் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கடந்த 2020ம் ஆண்டில் நாடு தழுவிய கொரோனா காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை எழுதி இயக்கியதோடு முக்கியமான கேரக்டரிலும் கவிதா நடித்திருந்தார். பெண்கள் அதிகாரம் குறித்த முதல் இந்திய நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. அந்த வகையில் மிகுந்த கவனத்தை பெற்றிருந்த கவிதா சௌத்ரியின் மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X