இறங்கி அடிச்ச விமானப்படை: ஒரு படத்தை தேடித் தேடி டவுன்லோடு செய்யும் மக்கள்
மும்பை: இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய நிலையில் மக்கள் ஒரு படத்தை அதிக அளவில் டவுன்லோடு செய்து வருகிறார்கள்.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது இந்தியா. தற்போது புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்குள்ளேயே சென்று தாக்கி வந்துள்ளது இந்திய விமானப்படை.

இந்திய மண்ணில் மேலும் தாக்குதல்கள் நடத்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பு திட்டமிட்டது தெரிய வந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம் அழிக்கப்பட்டது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் என்கிற உஸ்தார் காவ்ரி கொல்லப்பட்டார் என்று கோகலே மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் வீரச் செயலை பார்த்து இந்தியர்கள் பெருமை அடைந்துள்ளனர். இந்நிலையில் யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய முதல் சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றிய இந்தி படமான யூரி: தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் படத்தை டவுன்லோடு செய்வோரின் எண்ணிக்கை திடீர் என்று இன்று அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











