Suriya: ஆந்திராவில் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம்... கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
நாசாராவ்பேட்டை: நடிகர் சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சூர்யாவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவின் நாசராவ்பேட்டையில் ரசிகர்கள் சார்பில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அப்போது சூர்யாவுக்கு பேனர் வைத்த 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்: நேருக்கு நேர் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் சூர்யா. தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த சூர்யா, இப்போது ரியல் ஹீரோவாகவும் வலம் வருகிறார். நடிப்புத் தவிர அகரம் பவுண்டேஷன் மூலம் மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்து வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மாணவர்களுக்கு நிதியுதவி செய்கிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், படிக்க ஆர்வம் உள்ளவர்கள் என தகுதியான நபர்களை தேர்வு செய்து உதவுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு நிதியுதவி செய்திருந்தார். இப்படி மாணவர்களுக்கு தேடித் தேடி கல்வி கொடுத்து வரும் சூர்யா, அவரது ரசிகர்களுக்கும் உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால், அப்படியிருந்தும் சூர்யாவின் பிறந்தநாளில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதேபோல், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியானது.
அதேநேரம், ஆந்திர மாநிலம் நாசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பேனர் கட்ட முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் இருவர் பேனர் கட்டிய போது, அதிலிருந்த இரும்பு கம்பிகள் மின்சார வயரில் உரசியுள்ளது.
இதனால் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். வெங்கடேஷ், சாய் என்ற அவர்கள் இருவரது உடலையும் மீட்டு, அப்பகுதி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பேனர் கட்டும் கலாச்சாரத்தால் ஏற்கனவே பல உயிர்களை பறிகொடுத்த போதும், சூர்யாவின் ரசிகர்கள் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தியை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். ஆனாலும் இதுகுறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











