»   »  ‘தானா சேர்ந்த கூட்டம்’... சூர்யா படத்துக்கு ரஜினி பட வசனம்... விக்னேஷ் சிவன் இயக்கம்!

‘தானா சேர்ந்த கூட்டம்’... சூர்யா படத்துக்கு ரஜினி பட வசனம்... விக்னேஷ் சிவன் இயக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

நானும் ரவுடி தான் பட வெற்றிக்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக கபாலி பட இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Suriya 35's title announced

ஆனால், மீண்டும் ரஜினியையே ரஞ்சித் இயக்க இருக்கிறார். இதனால், விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா.

அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நயன்தாரா அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்துக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் பிரபலமான டயலாக் ஆகும்.

தலைப்பு வெளியாகிவிட்ட போதும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

English summary
This Suriya-Vignesh Shivn project will no longer be called as Suriya 35. The film has been titled as Thaanaa Serndha Koottam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil