பழங்குடி பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியே ஜெய்பீம்… ஒரு உண்மைக்கதை !

சென்னை : சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ஜெய்பீம் உண்மைக்கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படமாகும்.

தா செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து படமாக உருவாகி வருகிறது.

இதில் முக்கியமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

ஜெய்பீம்

ஜெய்பீம்

சூர்யாவின் பிறந்தநாளன்று அவரது 39வது படத்திற்கான தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

ஜெய்பீம் என பெயரிப்பட்டுள்ள இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். ரஜிதா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நடிகர் அருண் விஜய்யின் மகன் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஒரு உண்மை சம்பம்

ஒரு உண்மை சம்பம்

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 1993ம் ஆண்டு, ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்படுகிறது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு 96ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார்.

சட்டப்போராட்டம்

சட்டப்போராட்டம்

பழங்குடிப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும் தான் ஜெய்பீம். இருளர்களின் வாழ்க்கை குறித்த சில காட்சிகளும் இப்படத்தில் உள்ளன. மேலும், பழங்குடிச்சமூகமாக இருப்பதால் அவங்க மேலே போலீசார் போட்ட வழக்குகள் குறித்த தகவல்கள் இத்திரைப்படத்தில் இடம் பெறும்.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X