சூர்யாவின் 39வது படத்தின் பெயர் ஜெய்பீம்.. வக்கீல் கெட்டப்பில் அசத்தலாய் வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகர் சூர்யா நடிக்கும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 40வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி அந்தப் படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என பெயரிடப்பட்டது தெரியவந்தது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

சூர்யா 39 ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில் சூர்யாவின் 39 வது படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று மாலை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெய் பீம்
அதன்படி படத்துக்கு ஜெய் பீம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் வழக்கறிஞராக நடிக்கிறார் சூர்யா. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு..
இந்தப் படத்தை ஞானவேல் என்பவர் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஜெய் பீம் என்பது அம்பேத்கரை வாழ்த்தி செய்யப்படும் முழக்கம் ஆகும். சூர்யாவும் வக்கீல் கெட்டப்பில் உள்ளதால் இப்படத்தில் சூர்யா அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்
சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஜெய் பீம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜெய் பீம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸை தொடர்ந்து #Suriya39FirstLook என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











