கர்ணன் எஃபெக்டா.. கையில் வாளெடுத்து வெறித்தனமாக கிளம்பும் சூர்யா.. சும்மா வெறித்தனமா இருக்கே!
சென்னை: அருவா, துப்பாக்கி எல்லாம் போர் அடித்து விட்டது போல, ராஜ வாளுடன் தமிழ் சினிமா ஹீரோக்கள் வலம் வர தொடங்கி விட்டனர்.
கர்ணன் படத்தில் தனுஷ் வாளுடன் காட்சி தர, தற்போது சூர்யாவின் 40வது படத்தின் பிரத்யேக போஸ்டரில் கையில் வாளுடன் சூர்யா கெத்து காட்டுகிறார்.
சூர்யாவின் தம்பி கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தில் வாள் எடுத்து படப்பிடிப்பில் போர் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சூர்யா 40
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் துப்பாக்கி உடன் சூர்யா இருக்கும் போட்டோ வெளியாகி வைரலான நிலையில், மீண்டும் ஒரு புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

வாளுடன் சூர்யா
வேட்டி சட்டை அணிந்து கொண்டு, கையில் நீண்ட வாளுடன் சூர்யா நடந்து செல்லும் வெறித்தனமான சில் அவுட் புகைப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டு, சூர்யா 40 படப்பிடிப்பில் நடிகர் சூர்யா என கேப்ஷன் கொடுத்து வைரலாக்கி வருகிறது. திடீரென எந்தவொரு முன் அறிவிப்புமின்றி சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த ஹாட் அப்டேட் சூர்யா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

அருவாவை தூக்கிப் போட்டு
தமிழ் சினிமா ஹீரோக்கள் அருவாவை தூக்கிப் போட்டு தற்போது ராஜாக்கள் பயன்படுத்திய வாளுக்கு மாறி வருகின்றனர் என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இன்று வெளியாகி உள்ள கர்ணன் திரைப்பட்த்திலும் வாளை ஏந்தி குதிரையில் தனுஷ் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் ஒப்பந்தமான சூர்யா, அந்த படத்திலிருந்து சில பல காரணங்களுக்காக விலகியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த லெவல் மிரட்டல்
சூரரைப் போற்று படத்தின் மூலம் நடிப்பால் மிரட்டிய நடிகர் சூர்யா, அடுத்ததாக சூர்யா 40 படத்தின் மூலம் மிரட்ட உள்ளார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











