குவாரண்டைனில் சூர்யா.. அவசர அவசரமாக ’சூர்யா 40’ படத்துக்கு பூஜை போட்ட சன் பிக்சர்ஸ்.. என்ன ஆச்சு?

சென்னை: நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டில் ஓய்வெடுத்து வரும் சூழலில் அவசர அவசரமாக சன் பிக்சர்ஸ் 'சூர்யா 40' படத்தின் பூஜையை இன்று போட்டுள்ளது.

Recommended Video

Suriya 40 kick started today with Poojai | Vadivelu Come Back

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார்.

இன்று இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் 'சூர்யா 40' பூஜை புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

’சூர்யா 40’ பூஜை

’சூர்யா 40’ பூஜை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள 'சூர்யா 40' படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் சத்யராஜ், நாயகி பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

பூ போட்ட ஹீரோயின்

பூ போட்ட ஹீரோயின்

சுடிதார் அணிந்து செம அழகாக படத்தின் பூஜையில் கலந்து கொண்ட நாயகி பிரியங்கா அருள்மோகன் சாமி படத்துக்கு பூ போடும் காட்சியை சன் பிக்சர்ஸ் ஷேர் செய்துள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகனுக்கு அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாகும் சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது.

சத்யராஜ் ஆஜர்

சத்யராஜ் ஆஜர்

சூர்யா 40 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகர் சத்யராஜ் இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். முன்னதாக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் கார்த்தியின் அப்பாவாக பெரும் குடும்பஸ்த்தனாக நடித்து இருந்தார். சூர்யா 40 படத்திலும் சத்யராஜின் கிண்டல் நய்யாண்டி நிச்சயம் இருக்கும்.

வடிவேலு நடிக்கிறாரா?

வடிவேலு நடிக்கிறாரா?

சமீபத்தில் மனோ பாலா, சந்தான பாரதி உள்ளிட்டோருடன் வைகைப் புயல் வடிவேலு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. மேலும், சூர்யாவின் 40வது படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், தற்போது போடப்பட்டுள்ள பூஜையில் வடிவேலு இடம்பெறாத நிலையில், அவர் இந்த படத்தில் நடிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வீட்டில் சூர்யா

வீட்டில் சூர்யா

சமீபத்தில் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் சூர்யா, அதிலிருந்து வெற்றிகரமாக குணமாகி தற்போது வீட்டில் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் இல்லாமலே சூர்யாவின் 40வது படத்திற்கான பூஜை போடப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

சூர்யா இல்லாமல் ஏன்

சூர்யா இல்லாமல் ஏன்

இன்னும் ஒரு வாரத்தில் நடிகர் சூர்யா ஓய்வு முடிந்து வந்து விடுவாரே, அதற்குள் என்ன அவசரம் என அவரது ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து விளாசி வருகின்றனர். ஏற்கனவே பட பூஜை திட்டமிட்டு இருந்த நிலையில், சூர்யாவின் அனுமதியோடு தான் இன்று பூஜை போடப்பட்டு இருப்பதாகவும், விரைவில் ஷூட்டிங்கில் சூர்யா கலந்து கொள்வார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அப்போ வாடிவாசல்

அப்போ வாடிவாசல்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால், இன்னமும் சூரி மற்றும் விஜய்சேதுபதியை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் படத்தின் பணிகள் நிறைவடையாத நிலையில், முதலில் இந்த படத்தை முடித்து விட்டு அதன் பிறகு வாடிவாசலில் சூர்யா நடிப்பார் என்பது தெரிகிறது.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X