அடேங்கப்பா...சூர்யா 40 ல் 40 முக்கிய கேரக்டர்களா...அசத்தும் பாண்டிராஜ்

சென்னை : சூர்யா தற்போது, டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சில வாரங்களுக்கு முன் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்த படம் பூஜை போட்டதோடு நின்று போனது.

Recommended Video

SURIYA ரசிகர்களுக்கு ஒரு Bad New | SK மகளா இது? | Cinema RoundUp

தற்போது சூர்யா குணமடைந்து, இன்று சூட்டிங்கிற்கு திரும்பி உள்ளதால் மீண்டும் படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. தற்காலிகமாக சூர்யா 40 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் 40 முக்கிய கேரக்டர்கள் நடிக்கிறார்களாம்.

Suriya 40: The rural family drama will have almost 40 significant characters

மெகா நட்சத்திர கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் 40 கேரக்டர்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமென்ட் கிராமத்து குடும்ப கதையாக சூர்யா 40 உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ஒரு மாறுபட்ட தோற்றத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை படங்களிலும் ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். அதே வழியில் இந்த படத்தையும் அதிக கேரக்டர்கள் கொண்ட படமாக பாண்டிராஜ் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், வினய், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். டி.இமான் இசையமைக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X