ப்பா. வேறலெவல் மிரட்டல்.. சூர்யா 41 படத்தின் டைட்டில் இதுதானா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு!

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 41வது படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி ஹீரோவாக முன்னேறினார்.

சமீப காலமாக சொதப்பி வரும் இயக்குநர் பாலாவுக்கு தனது தயாரிப்பில் இயக்க வாய்ப்பு அளித்தது மட்டுமின்றி அந்த படத்தில் தானே நடித்தும் வருகிறார் சூர்யா.

பாலாவுக்கு வாய்ப்பு

பாலாவுக்கு வாய்ப்பு

விக்ரம், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலா. ஒரு காலத்தில் இந்திய சினிமாவே இவரது படங்களை பார்த்து மிரண்டு போனது. ஆனால், தார தப்பட்டை, வர்மா உள்ளிட்ட படங்கள் சொதப்பிய நிலையில், புதிய படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த பாலாவுக்கு சூர்யா 41வது படத்தை இயக்கும் வாய்ப்பை கிடைத்துள்ளது.

சுதா கொங்கரா மேற்பார்வையில்

சுதா கொங்கரா மேற்பார்வையில்

பாலா இயக்கத்தில் மீண்டும் ஏன் சூர்யா படம் பண்ணுகிறார். ஏதாவது பிரச்சனை ஏற்படுமே என்றும் படம் சொதப்பினால் தேவையில்லாத மன வேதனை தானே என ஏகப்பட்ட விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத சூர்யா சுதா கொங்கராவின் மேற்பார்வையில் இந்த படத்தை உருவாக்க முடிவு செய்தார்.

மறுபடியும் பிரச்சனை

மறுபடியும் பிரச்சனை

கோபத்துக்கு பெயர் போனவர் இயக்குநர் பாலா என்பது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும் தெரிந்த ஒன்று தான். சூர்யா 41வது படம் கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது என்றும் படமே டிராப் ஆகிடுச்சு என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியாக உடனடியாக பாலா இயக்கத்தில் சூர்யா 41வது படம் மீண்டும் தொடங்கும் அறிவிப்பை சூர்யாவே வெளியிட்டு இருந்தார்.

என்ன டைட்டில்

என்ன டைட்டில்

இந்நிலையில், சூர்யாவின் 41வது படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 'வணங்கான்' என்கிற டைட்டிலை தான் பாலா கன்ஃபார்ம் செய்து வைத்துள்ளார் என்றும் 'கடலாடி' என்கிற மற்றொரு டைட்டிலும் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றன. சூர்யா இந்த படத்தில் படகோட்டியாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் எதிர்பார்ப்பு

விக்ரம் எதிர்பார்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் சூர்யாவும் மாஸ் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்பதால், விக்ரம் படத்தின் மீது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சூர்யா 41 படத்தின் டைட்டில் அறிவிப்பும் வெளியானால் வேற லெவல் கொண்டாட்டம் தான் சூர்யா ரசிகர்களுக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X