அப்போ டைகர் ஷெராஃப்புக்கு டாட்டா தானா? புது பாய் ஃபிரெண்ட் உடன் செஃல்பி எடுத்த சூர்யா 42 நடிகை!

மும்பை: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பை காதலித்து வருகிறார் திஷா பதானி என்றும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது புது பாய் ஃபிரெண்ட் உடன் படு நெருக்கமாக திஷா பதானி செல்ஃபி எடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் திஷா பதானி.

படு கிளாமராக உடல் முழுக்க பல இடங்களில் கிழித்து விட்ட டிசைனில் உடை அணிந்து அலெக்ஸாண்டர் எனும் மாடல் உடன் திஷா பதானி எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சூர்யா 42 ஹீரோயின்

சூர்யா 42 ஹீரோயின்

பாலிவுட்டின் பிகினி நடிகையான திஷா பதானி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் திஷா பதானி ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்து வைத்து திக்குமுக்காட செய்து வரும் நிலையில், அவருடைய ரீசன்ட் க்ளிக்ஸ் பாலிவுட் ரசிகர்களை ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளது.

டைகர் ஷெராஃப் உடன் காதல்

டைகர் ஷெராஃப் உடன் காதல்

பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃபின் மகனும் பாலிவுட் நடிகருமான டைகர் ஷெராஃப்பை நடிகை திஷா பதானி காதலித்து வருவதாக பெரும் பேச்சுக்கள் பாலிவுட்டில் நிலவின. இருவரது திருமணம் பற்றி கூட நடிகர் ஜாக்கி ஷெராஃப் பேசியிருந்தார். இந்நிலையில், திடீரென தனது பாய் ஃபிரெண்டை மாற்றிவிட்டாரா திஷா பதானி என கேள்விகள் எழுந்துள்ளன.

புது பாய் ஃபிரெண்ட்

புது பாய் ஃபிரெண்ட்


மாடல் நடிகர் அலெக்ஸாண்டர் என்பவருடன் திடீரென அதிக நெருக்கம் காட்டி வருகிறார் திஷா பதானி. இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களையும் பதற வைத்துள்ளார்.

ஓவர் நெருக்கம்

ஓவர் நெருக்கம்

இருவரும் இப்போதெல்லாம் அடிக்கடி வெளியே சுற்றி வருவதாகவும் மற்றவர்களுடன் எடுக்கும் போட்டோக்களை எல்லாம் வெளியிடாமல் அலெக்ஸாண்டர் உடன் எடுக்கும் போட்டோவை மட்டும் திஷா பதானி வெளியிடுவது ஏன் என பாலிவுட் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி திஷா பதானியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

டைகர் ஷெராஃப் தங்கை கமெண்ட்

டைகர் ஷெராஃப் தங்கை கமெண்ட்

திஷா பதானியின் நெருங்கிய தோழியாக மாறி உள்ள டைகர் ஷெராஃப்பின் தங்கை கிருஷ்ணா ஷெராஃப் இந்த போட்டோக்களை பார்த்து ஃபயர் விட்டு இருப்பதும் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளன. ரூமர் பாய்ஃபிரெண்ட் என பாலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், தனது புதிய காதலரை பகிரங்கமாக அறிமுகப்படுத்தி உள்ளார் திஷா பதானி என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

7ம் அறிவை விட பெருசு

7ம் அறிவை விட பெருசு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் சூர்யா 42 படம் 7ம் அறிவு படம் போல இருக்குமா என எழுந்த கேள்விக்கு 7ம் அறிவை விட பெரிய அளவிலான படம் இது என படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த படத்தில் திஷா பதானி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X