சூர்யா 42 ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா... இது மார்வெல் புரோடக்‌ஷனுக்கு தெரியுமா?

சென்னை: சூர்யா நடித்து வரும் 'சூர்யா 42' படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் டீசர், டைட்டில் அப்டேட், ரிலீஸ் தேதிக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சிவா இயக்கி வரும் இந்தப் படம் வரலாற்றுப் பின்னணியில் பேண்டசியாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், சூர்யா 42 படத்தின் கதை குறித்தும் அதன் பின்னணி பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சூர்யா 42 ஷூட்டிங்

சூர்யா 42 ஷூட்டிங்

சூர்யாவின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 42' என டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் 10 மொழிகள், 3டி டெக்னாலஜி என பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர். மேலும் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 ஹாலிவுட் காப்பி

ஹாலிவுட் காப்பி

சூர்யா 42 குறித்து அறிவிப்பு வெளியான போது, இந்தப் படம் வேள்பாரி நாவலை பின்னணியாக வைத்து உருவாகிறது என சொல்லப்பட்டது. வேள்பாரி நாவலை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், சூர்யா 42 வேள்பாரி நாவலின் பின்னணி இல்லை என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில், தற்போது ஹாலிவுட் படத்தின் காப்பி தான் சூர்யா 42 என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 மார்வெல் சீரிஸ் படைப்பு

மார்வெல் சீரிஸ் படைப்பு

அதன்படி, இது மார்வல் சீரிஸ்களில் ஒன்றான Shang-Chi and the Legend of the Ten Rings படத்தின் காப்பி என சொல்லப்படுகிறது. கடந்தாண்டு வெளியான இந்த ஹாலிவுட் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவன் சாகாவரத்துடன் பலவித தோற்றங்களில் வாழ்ந்து வருகிறான். வில்லனான அவனுக்கும் 2023ல் உள்ள ஹீரோவிற்கும் நடக்கும் போர் தான் சூர்யா 42 படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

 6 தோற்றங்களில் சூர்யா

6 தோற்றங்களில் சூர்யா

இதற்காக மொத்தம் 6 விதமான தோற்றங்களில் சூர்யா நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அப்டேட்டும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சூர்யா 42 ரிலீஸ் தேதி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். அதன்படி இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் இறுதியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 மே மாதம் டீசர்

மே மாதம் டீசர்

அதேபோல், சூர்யா 42 டீசர் மே மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அப்டேட் கொடுத்துள்ளார். இதனிடையே சூர்யா 42 படத்திற்கு 'வீர்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 10 மொழிகளில் உருவாகி வருவதால், வீர் என்ற டைட்டில் சரியாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். முன்னதாக இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X