சூர்யா 42 ரிலீஸ் தேதி இதுதானா...? ப்ரோமோவுடன் வெளியாகும் அப்டேட்... ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தற்போது அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா 42 என்ற டைட்டிலில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து வருகிறது.
சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படம் 10 மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ், ரிலீஸ் தேதி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

படப்பிடிப்பில் சூர்யா 42
சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா. அதன்பின்னர் தொடர்ந்து மும்பையில் முகாமிட்டு வரும் அவர், இன்னொரு பக்கம் சூர்யா 42 படப்பிடிப்பிலும் பிஸியாக காணப்படுகிறார். முன்னதாக பாலா இயக்கத்தில் நடித்து வந்த வணங்கான் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் தற்போது சூர்யா 42 திரைப்படம் மட்டுமே அவரது கைவசம் உள்ளது.

சூர்யா 42 ரிலீஸ் தேதி
கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு சென்னை, கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் கம்போஸ் செய்கிறார். இந்நிலையில், சூர்யா 42 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் இறுதியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

டைட்டில் ப்ரோமோவுடன் அப்டேட்
சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் சூர்யா 42 படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு 'வீர்' என்று டைட்டில் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 10 மொழிகளில் உருவாகி வருவதால், வீர் என்ற டைட்டில் பொதுவானதாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதேபோல், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை டைட்டில் ப்ரோமோவுடன் அறிவிக்கவும் சிவா ப்ளான் செய்துள்ளாராம்.

விரைவில் எக்ஸ்குளூசிவ் அப்டேட்
அதன்படி, சூர்யா 42 டைட்டில் ப்ரோமோ ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்து ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. இந்தப் படத்திற்காக சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. சூர்யாவின் நடிப்பில் முதன்முறையாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படமாக சூர்யா 42 வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











