Suriya 42: சூர்யா 42 டைட்டில் இதுவா..? என்னாச்சு சிவாவுக்கு வேற டைட்டிலே கிடைக்கலையா..?

சென்னை: சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

இந்தப் படத்திற்கு வீர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக முதலில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது சூர்யா 42 படத்திற்கு வேறு ஒரு டைட்டிலை முடிவு செய்துள்ளாராம் சிறுத்தை சிவா.

சூர்யா 42 டைட்டில்
சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களுக்குப் பிறகு சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் மட்டுமே வெளியானது. கமல் - லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தில், கேமியோவாக ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

 Suriya 42 is reportedly titled Agneeswaran

10 மொழிகளில் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில், இந்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மொழிகளில் வெளியாகவுள்ளதால் சூர்யா 42 படத்திற்கு 'வீர்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சிறுத்தை சிவாவுக்கு 'வி' சென்டிமெண்ட் பக்காவாக ஒர்க் அவுட் ஆகும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது இந்த டைட்டிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சூர்யா 42 படத்திற்கு அக்னீஸ்வரன் என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹிஸ்டாரிக்கல் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஒரு போர் வீரனாக நடித்து வருகிறாராம். அதானால், கடவுளின் பெயரான அக்னீஸ்வரன் என்பதையே இப்படத்திற்கு டைட்டிலாக வைக்க சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்த அபிஸியல் அப்டேட் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Suriya 42 is reportedly titled Agneeswaran

பத்து தல படத்தின் ப்ரமோஷன் பேட்டிகளில் பேசிய ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, சூர்யா 42 அப்டேட்ஸ் குறித்தும் கூறியிருந்தார். ஏப்ரலில் டைட்டில் டீசர் வெளியாகும் எனவும், மே மாதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இதனால், கடந்த சில தினங்களாகவே சூர்யா 42 என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது அக்னீஸ்வரன் என்ற டைட்டிலையும் சூர்யா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X