கங்குவா.. கங்காருவா.. என்ன டைட்டில் இது? சூர்யா 42 டைட்டிலை கலாய்க்கும் ரசிகர்கள்.. அர்த்தம் இதுவா!
சென்னை: சூர்யா 42 படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.
10 மொழிகளிலும் சேர்த்து கங்குவா என்கிற வித்தியாசமான டைட்டிலை இயக்குநர் சிறுத்தை சிவா வைத்துள்ளார்.

கங்குவா என்பதற்கான அர்த்தம் எந்த மொழியில் இருக்கும் என ரசிகர்கள் கூகுளை தேடி வரும் நிலையில், நெட்டிசன்கள் கங்குவா டைட்டிலை வைத்து ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போட்டு வருகின்றனர்.
பூஜைக்கே ட்ரோல்: சூர்யா 42 படத்தின் பூஜை ரகசியமாக நடத்தப்பட்ட நிலையில், அந்த பூஜைக்கு அர்னால்டு வருகிறார், எலான் மஸ்க் வருகிறார், ஜானி சின்ஸ் வருகிறார் என போட்டோ மீம்களாக வைத்து ஆரம்பமே அதிரடியாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதன் பிறகு சூர்யா 42 படத்தின் பட பூஜை ஸ்டில்கள் சில நாட்கள் கழித்து வெளியான நிலையில், ரசிகர்கள் அந்த படத்திற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

10 மொழிகளில் 3டியில்: தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பண்ணாத புதிய முயற்சியாக 10 மொழிகளில் இந்த படத்தை 3டியில் ரிலீஸ் செய்யப் போகிறோம் என்கிற அறிவிப்பும் சரித்திர காலத்து படம் போல இருக்கும் மோஷன் போஸ்டரை பார்த்தே ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர்.
டைட்டில் இதுதான்: இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 படத்திற்கு 'கங்குவா' என வித்தியாசமான டைட்டில் 10 மொழிகளுக்கும் சேர்த்து வைக்கப்பட்டு இருக்கிறது. புதிய அனிமேஷன் மோஷன் போஸ்டருடன் கங்குவா டீசர் வெளியாகி உள்ளது. ஆனால், சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் இன்னமும் வெளியாகவில்லை.

அர்த்தம் என்ன?: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் கங்குவா என கூகுளில் தேடினால் கிடைக்கிறது. கங்கு என்றால் நெருப்பு என்பதை குறிக்கும் விதமாக இருக்குமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. உண்மையான விளக்கத்தை படக்குழு விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.
கங்குவா ட்ரோல்: அதே சமயம் கங்குவா என படத்தின் டைட்டிலை பார்த்த சூர்யா ஹேட்டர்கள் என்ன கங்குவா? கங்காருவன்னு? டைட்டில் வச்சிருக்காங்க, கண்டிப்பா சிறுத்தை சிவா சூர்யாவை வச்சு செய்யப் போகிறார் என ட்ரோல்களை குவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் தட்டு: பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் போஸ்டரில் இருந்து அந்த தட்டு கேடயத்தை தூக்கிட்டு வந்து காப்பி அடிச்சு ஒரு டிசைன் போட்டுருக்காங்க என்றும் நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











