Kanguva - சூர்யா 42 பெயர் கங்குவா.. வெளியானது டைட்டில் டீசர்
சென்னை: Suriya 42 Kanguva (சூர்யா 42 பட பெயர் கங்குவா) சூர்யா 42 படத்தின் போஸ்டரும், பெயரும் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்படும் என தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்த சூழலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே போஸ்டர் லீக்காகியிருப்பது படக்குழுவை பெரும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
சூர்யா சமீபகாலமாக நடித்துவரும் படங்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. வெறும் வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அவரது படங்களுக்கு பலமான வரவேற்பு கிடைத்துவருகிறது. அப்படி அவர் நடித்த சூரரைப் போற்று படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம் சூர்யா: சூர்யாவின் கேரியரிலேயே மிக முக்கிய படமாக அமைந்தது ஜெய் பீம். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான அந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அதேபோல் சூர்யாவுக்கும் மிகச்சிறந்த பெயரை ஜெய் பீம் பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி சூர்யா போல் முன்னணி நடிகர்கள் சமூக அக்கறையுள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.
சூர்யா 42: ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு வணங்கான், வாடிவாசல், சூர்யா 42 ஆகிய படங்களில் கமிட்டானார். இதில் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வணங்கானிலிருந்து வெளியேறினார் சூர்யா. இதற்கிடையே வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. ஆனால் அந்தப் படம் அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் இன்னும் இருக்கிறது. எனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42ஆவது படத்தில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் சூர்யா.
10 மொழிகளில் சூர்யா 42: ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பெரும் பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3டியில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் சரித்திர கால கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திஷா பதானி கதாநாயகியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோலிவுட்டில் இப்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் சூர்யா 42 படமும் ஒன்று. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தாலும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது.

கங்குவா: இந்நிலையில் படத்தின் பெயரும், போஸ்டரும் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி டைட்டில் டீசரை படக்குழு அறிவித்திருக்கிறது. படத்துக்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் டீசரை பார்த்த சூர்யா ரசிகர்கள் படம் நிச்சயம் மெகா ஹிட்டடிக்கும் எனவும், கங்குவா என்ற பெயர் வித்தியாசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











