Don't Miss!
- News
"புருஷன் சேஷரிங்.." தெறிக்கவிடும் இரட்டை அழகிகள்.. காரணத்தை கேட்ட ஷாக் ஆவீங்க! இது புதுசா இருக்கே
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
சூர்யா 42 படத்துக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமா... சிறுத்தை சிவா எடுத்த அதிரடி முடிவு?
சென்னை: சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்', சிறுத்தை சிவா இயக்கும் 'சூர்யா 42' படங்களில் நடித்து வருகிறார்.
இதில், ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் சூர்யா 42 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று முடிந்தது.
இதனைத் தொடர்ந்து சூர்யா 42 படத்தின் சூட்டிங் எங்கு எப்போது தொடங்கவுள்ளது என அப்டேட் கிடைத்துள்ளது.
240
நாடுகளில்
என்
வெப்சீரிஸ்
வெளியாகுது..
வதந்தி
டிரைலர்
ரிலீஸ்..
குஷியில்
எஸ்.ஜே.
சூர்யா!

வேகமெடுக்கும் சூர்யா 42
சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், லோகேஷ் இயக்கத்தில் கமல், ஃபகத், பாசில், விஜய் நடித்த விக்ரம் படத்தில் ஒரு ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரிலும் வந்து மிரட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து 'வணங்கான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் குறித்து செப்டம்பர் 9ம் தேதி அறிவிப்பு வெளியான வேகத்தில் முதற்கட்ட படபிடிப்பை கோவாவில் நடத்தி முடித்துள்ளார் சிவா. .

அடுத்தக்கட்ட ஷூட்டிங்
'சிறுத்தை' சிவா இயக்கும் சூர்யா 42 படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 10 மொழிகளில் 3 டி டெக்னாலஜியில் உருவாகும் சூர்யா 42 ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பீரியட் படமாக உருவாகிறதாம். மேலும், இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளது இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இலங்கையில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரம்மாண்டத்தின் உச்சம்
இலங்கையில் நடைபெறவுள்ள சூர்யா 42 படப்பிடிப்புக்காக படக்குழு ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளதாம். அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பின்னணியில் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பழங்கால அரண்மனைகள், உடைகள், அணிகலன்கள் என எல்லாவற்றிலும் அதிகம் மெனக்கெடல் செய்து வருகிறாராம் இயக்குநர் சிவா. இந்த போர்ஷனுக்காக மிகப் பெரிய பட்ஜெட்டை ஸ்டூடியோ கிரீன் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தில் இந்தக் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் என சொல்லப்படுகிறது.

சூர்யா – சிவாவின் திட்டம் இதுதான்
சூர்யா 42 வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளதால், காட்சிகளின் பின்னணியில் மின்சார வயர்கள், டிரான்ஸ்ஃபார்ம் போன்ற எதுவும் தென்படக் கூடாது என படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக தான், கோவா, இலங்கை பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். மணிரத்னமும் பொன்னியின் செல்வன் படத்தில் இதேமுறையை தான் பயன்படுத்தினார். அதனால், தான் பொன்னியின் செல்வனும் ரியலாக இருந்தது. இப்போது சூர்யா 42 படத்துக்காகவும் அதே பாணியை பின்பற்ற சூர்யாவும் சிவாவும் முடிவெடுத்துள்ளனராம். சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.