Suriya 42: ரஜினியின் டைட்டிலை தட்டித் தூக்கிய சிவா... சூர்யா 42 பட தலைப்பை லீக் செய்த படக்குழு?
சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகிறது.
இந்தப் படத்தின் டைட்டில் வரும் 16ம் தேதி காலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சூர்யா 42-க்கு ரஜினி பட டைட்டிலை படக்குழு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி டைட்டிலில் சூர்யா 42
சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் சூர்யா 42 டைட்டில் வரும் 16ம் தேதி வெளியிடப்படுகிறது.
கடந்தாண்டு செப்டம்பரில் சூர்யா 42 படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியானது. மோஷன் போஸ்டரிலேயே சூர்யா 42 படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது படக்குழு. ஹிஸ்டாரிக்கல் ஜானரில் படுமிரட்டலாக உருவாகும் இந்தப் படம், சூர்யாவின் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சூர்யா 42 படத்திற்கு 'வீர்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. அதன்பின்னர் வெளியான தகவல்களின் படி, அக்னீஸ்வரன் என்ற டைட்டிலை சிவா முடிவு செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், இப்போது இன்னொரு டைட்டிலும் ரேஸில் உள்ளது. 1984ம் ஆண்டு ரஜினி நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம் Gangvaa. தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் படத்தின் இந்தி ரீமேக் தான் இது.
இந்தப் படத்தின் டைட்டிலான கங்குவா தான், சூர்யா 42 பட டைட்டிலாக வைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. 10 மொழிகளுக்கும் பொதுவான பெயரா இருக்க வேண்டும் என சிறுத்தை சிவா யோசித்து வந்தாராம். அதனடிப்படையில் தான் இந்த கங்குவா என்ற டைட்டிலை சூர்யா 42 படத்துக்கு வைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுகுறித்து உறுதியான அப்டேட் வரும் 16ம் தேதி வெளியாகிறது.

வீர், அக்னீஸ்வரன் என்ற பெயர்கள் கூட அனத்துதரப்பு ரசிகர்களுக்கும் கனெக்ட் ஆகும் விதமாக உள்ள்து. ஆனால் கங்குவா என்ற டைட்டில் வித்தியாசமாக இருப்பதாகவும், இது சூர்யா 42க்கு செட் ஆகாது எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும், இதுகுறித்து இன்னும் முழுமையான அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 42 டைட்டில் டீசரை தொடர்ந்து, மே மாதம் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால், கடந்த சில தினங்களாகவே சூர்யா 42 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்தா/ண்டு இறுதிக்குள் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











