Suriya 43: கங்குவா ஒருபக்கம் இருக்கட்டும்... சூர்யா 43 லுக் பார்த்தீங்களா... மாஸ் காட்டும் போஸ்டர்!
சென்னை: சூர்யா தற்போது 'சிறுத்தை' சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார்.
ஆனால், வெற்றிமாறனின் விடுதலை 2 தாமதமானதால் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சூர்யா.
இந்தப் படத்தின் அப்டேட் இன்னும் வெளியாகாத நிலையில், 'சூர்யா 43' போஸ்டர் ஒன்று இணையத்தை கலங்கடித்து வருகிறது.

சூர்யா 43 மிரட்டல் போஸ்டர்: சூர்யா தனது 42வது படமான கங்குவா-வில் பிஸியாக நடித்து வருகிறார். 'சிறுத்தை' சிவா இயக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் 2023 இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் வாடிவாசல் ஷூட்டிங் தாமதமாவதாக சொல்லப்படுகிறது. இதனால், சூர்யா தனது 43வது படம் குறித்து அதிரடியாக முடிவெடுத்துள்ளார். அதன்படி, சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. சூரரைப் போற்று மூலம் முதன்முறையாக இணைந்த இக்கூட்டணி, முதல் படத்திலேயே 6 தேசிய விருதுகளை வென்று அசத்தியது.
அதனால், சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. வரும் 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'சூர்யா 43' அப்டேட்டை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதேநாளில் கங்குவா படத்தில் இருந்தும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூரரைப் போற்று மாதிரியே செம்ம மாஸ்ஸான கதையை தேர்வு செய்துள்ளாராம் சுதா கொங்கரா. இதனால், சூர்யா - சுதா கொங்கரா - ஜிவி பிரகாஷ் கூட்டணியின் மேஜிக் 'சூர்யா 43' படத்திலும் தாறுமாறான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் எகிற வைக்கும் விதமாக சூர்யாவின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா செம்ம யூத் லுக்கில், வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ள இந்த போஸ்டர், ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா 43 படத்தின் ஃபேன் மேட் போஸ்டராக உருவாகியுள்ள இது, அவரது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அதேநேரம் இது படக்குழுவினரின் அபிஸியல் போஸ்டர் இல்லையென்பதால், ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளில் கங்குவா க்ளிம்ப்ஸ் வீடியோ, சூர்யா 43 அபிஸியல் அப்டேட் என இரண்டு விருந்துகள் கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











