Suriya43: சூர்யாவுக்கு ஜோடி யார்..? அதிதியை ஓவர்டேக் செய்த நஸ்ரியா... பரபரக்கும் சூர்யா 43 அப்டேட்

சென்னை: சூர்யா தற்போது கங்குவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார்.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வாடிவாசல் ஷூட்டிங் தாமதமாகும் என்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூர்யா 43' படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக அதிதி ஷங்கர் நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது நஸ்ரியா நஸிம் இந்த ரேஸில் இணைந்துள்ளார்.

 Suriya 43: Nazriya in talks to play female lead in Suriya 43

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா..?: சூர்யா தற்போது 'சிறுத்தை' சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு சூர்யா ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், கங்குவா ஷூட்டிங்கை முடித்துவிட்டு, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், வாடிவாசல் ஷூட்டிங் தள்ளிப்போகலாம் எனத் தெரிகிறது.

இதனால், கங்குவா முடிந்ததும் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளாராம் சூர்யா. ஏற்கனவே சூரரைப் போற்று திரைப்படம் மூலம் மாஸ் காட்டிய இக்கூட்டணி, மீண்டும் இணையவிருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சூர்யா 43 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இத்திரைப்படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வருகிறது.

சூர்யா ஹீரோவாகவும் அவருக்கு தம்பியாக துல்கர் சல்மானும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், துல்கர் சல்மானும் கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா 43 படத்தின் வில்லன் யாரென்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமன்னாவின் காதலனும் மிஸாபூர் பிரபலம் விஜய் வர்மா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் சூர்யாவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என மிகப் பெரிய டிஸ்கஷன் நடந்து வருகிறதாம். முதலில் அதிதி ஷங்கர் தான் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. கார்த்தியின் விருமன் படத்தைத் தொடர்ந்து, சூர்யா 43ல் அண்ணனுக்கும் ஜோடியாகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த ரேஸில் நஸ்ரியா நஸிம் இணைந்துள்ளதாகத் தெரிகிறது.

 Suriya 43: Nazriya in talks to play female lead in Suriya 43

பான் இந்தியா நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பின்னர், நடிப்பில் இருந்து விலகியிருந்த நஸ்ரியா, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு செய்துள்ளாராம். தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் படங்கள் மூலம் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்தார். தொடர்ந்து இன்னும் பல க்யூட்டான கேரக்டர்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபஹத் பாசிலுடன் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், தெலுங்கில் அண்டே சுந்தராகினி திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து கம்பேக் கொடுத்திருந்தார். அதனால், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த நஸ்ரியா முடிவு செய்துள்ளாராம். இதனையடுத்து தற்போது சூர்யா 43 படத்திற்காக அவருக்கு பெரிய ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க, நஸ்ரியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுபற்றி அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X