Suriya: ஓயாத பருத்திவீரன் சர்ச்சை.. மதுரை பறக்கும் சூர்யா.. பிரபல இயக்குநர் எடுத்த முடிவு இதுதானா?

சென்னை: சூர்யா நடித்து வரும் கங்குவா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

Suriya 43: Suriya 43 First Schedule Shoot Plan To Madurai Location

மதுரை செல்லும் சூர்யா
சூர்யாவின் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட 38 மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது படக்குழு. கங்குவா ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், அந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது தள்ளிப் போயுள்ளது. இன்னொரு பக்கம் இந்தப் படத்தில் சூர்யா நடிப்பாரா என்பதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில தினங்களாக பருத்திவீரன் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதற்கு வாடிவாசல் படமும் காரணம் என சொல்லப்படுகிறது.

அதாவது வாடிவாலில் அமீர் கண்டிப்பாக நடிப்பார் என வெற்றிமாறன் கூறிவிட்டார். ஆனால், அதில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. இதற்கெல்லாம் பருத்திவீரன் படத்தில் அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையேயான மோதல் தான் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பருத்திவீரன், வாடிவாசல் என பல சர்ச்சைகள் பரபரப்பாக காணப்படுகின்றன.

இந்த சூழலில் தான் சூர்யா தனது 43வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளார். ஏற்கனவே சூரரைப் போற்று மூலம் மாஸ் காட்டிய இக்கூட்டணி, தற்போது சூர்யா 43 படத்தில் இணைந்துள்ளது. 'சூர்யா 43' டைட்டில் 'புறநானூறு' என ஒரு சஸ்பென்ஸ் வைத்து அறிவிக்கப்பட்டது. அதாவது டைட்டிலில் புறநானூறு என்ற ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு, அதற்கு முந்தையை வரி மறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா நஸிம் ஆகியோர் நடிப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இது ஜிவி பிரகாஷின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் இறுதியில் தொடங்கவுள்ளதாம். முக்கியமாக இந்தப் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சூர்யா 43 படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அமீரின் பருத்திவீரன் திரைப்படம் மதுரை பின்னணியில் உருவாகியிருந்தது. தற்போது பருத்திவீரன் பட சர்ச்சை ஓயாத நிலையில், சூர்யா தனது 43வது படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை செல்லவிருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X