Suriya 43: அமர்க்களப்படுத்தும் சூர்யா 43 போஸ்டர்... சூர்யா, துல்கர் சல்மான் ப்ரோமோ ஷூட்டா இது..?
சென்னை: சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா.
ஆனால், தற்போது சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தற்போது அவருடன் சூர்யாவும் இருக்கும் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

அமர்க்களப்படுத்தும் சூர்யா, துல்கர் சல்மான் போஸ்டர் : சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளாராம். முன்னதாக சூர்யாவின் 43வது படமாக வெற்றிமாறனின் வாடிவாசல் உருவாகும் என சொல்லப்பட்டது. ஆனால், விடுதலை 2ம் பாகத்தை வெற்றிமாறன் இன்னும் முடிக்கவில்லை என்பதால் வாடிவாசல் படப்பிடிப்பு தாமதமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் சூரரைப்போற்று திரைப்படம் மூலம் தேசிய விருது கிடைக்க காரணமான சுதா கொங்கராவுடன் மீண்டும் இணையவுள்ளாராம் சூர்யா. இத்திரைப்படம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக சூர்யாவுடன் மலையாள வெரைட்டி நடிகர் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு போஸ்டர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. அதில் சூர்யாவும் துல்கர் சல்மானும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். அபிஸியல் அப்டேட் வெளியாகும் முன்பே அதிரடியாக போஸ்டர் வெளியாகிவிட்டதா என ரசிகர்கள் ஷாக்கிங்கில் உள்ளனர். ஆனால், இது படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பதும், ஃபேன்மேட் போஸ்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவும் கலையரசனும் இடம்பெற்ற போஸ்டரை எடிட் செய்து, அதில் துல்கர் சல்மானை வைத்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஃபேன்மேட் போஸ்டர் சூர்யா 43 படக்குழுவினருக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இப்படியொரு போஸ்டருடன் அபிஸியல் அப்டேட் வெளியாக வேண்டும் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் சூர்யா 43 அபிசியல் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் சூர்யா, துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பவர்கள், ஹீரோயின்ஸ் பற்றிய அப்டேட்டும் விரைவில் வெளியாகவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











