Suriya 43: லியோ ஃபீவர் ஓவர்... ஃபயர் மோடில் சூர்யா 43 அப்டேட்... சம்பவத்துக்கு ரெடியா..?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா.
ஆனால், தற்போது சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

ரெடியானது சூர்யா 43 அப்டேட்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வென்றார். சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக சூர்யா மட்டுமின்றி அபர்ணா பாலமுரளி, இயக்குநர் சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் ஆகியோரும் தேசிய விருது வென்றனர்.
இதனால் இக்கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அவர்களின் எதிர்பார்ப்புக்கு தரமான அப்டேட் ஒன்று ரெடியாகியுள்ளதாம். சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஹிஸ்டாரிக்கல் ஜானரில் ஃபேண்டஸியாக உருவாகும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. கங்குவாவை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையவிருந்தார் சூர்யா.
அதன்படி, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், விடுதலை 2 ஷூட்டிங் தாமதமாவதால், வாடிவாசல் படப்பிடிப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் அதற்குள்ளாக சுதா கொங்கரா படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார். சூரரைப் போற்று படத்துக்குப் பின்னர் இரண்டாவது முறையாக இணையும் இக்கூட்டணியில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகிவிட்டது.
மேலும், துல்கர் சல்மான், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, நஸ்ரியா நஸிம் ஆகியோரும் சூர்யா 43 படத்தில் நடிக்கவுள்ளார்களாம். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் நாளை மாலை வெளியாகவுள்ளதாம். அபிஸியலாக வெளியாகவுள்ள இந்த அப்டேட்டில் சூர்யா 43ல் இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய விவரங்களும் முழுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரரைப் போற்று போல் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள சூர்யா 43, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதேபோல், இந்த முறை நேரடியாக ஓடிடியில் வெளியிடாமல், திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என சூர்யா கூறியுள்ளாராம். இதனால் கங்குவாவை தொடர்ந்து சூர்யா 43 படமும் சூர்யா ரசிகர்களுக்கு சம்பவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











