Suriya 43: அமர்க்களமான கூட்டணியில் சூர்யா 43... டைட்டிலில் ட்விஸ்ட் வைத்த படக்குழு!!
சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது அந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா 43 டைட்டிலில் டிவிஸ்ட் வைத்ததுடன் இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றியும் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யா 43 அப்டேட் வெளியானது
சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படம், ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பிரம்மாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கங்குவா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையவிருந்தார் சூர்யா.
அதன்படி, சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் என்ற படம் உருவாகவிருந்தது. ஆனால், விடுதலை 2 ஷூட்டிங் இன்னும் முடியவில்லை என்பதால், வாடிவாசல் படப்பிடிப்பும் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. அதனால் வாடிவாசலுக்கு முன்னதாக வேறொரு படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார் சூர்யா. அந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக சொல்லப்பட்டது.
தற்போது அது கன்ஃபார்ம் ஆனதுடன், டைட்டிலுடன் கூடிய அபிஸியல் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. சூர்யா 43 என்ற பெயரில் வெளியான இந்த அப்டேட்டில், படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'சூர்யா 43' டைட்டில் 'புறநானூறு' என டிவிஸ்ட் வைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது டைட்டிலில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழு, அதற்கு முந்தையை வரியை மறைத்துள்ளது.
மேலும், இந்தப் படத்தில் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, நஸ்ரியா நஸிம் ஆகியோர் நடிப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேபோல், ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இது ஜிவி பிரகாஷின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. புறநானூறு என்ற டைட்டிலுடன் அட்டகாசமான டீசருடன் சூர்யா 43 அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த டீசரை பார்க்கும் போது, சூரரைப் போற்று படம் போல சூர்யா 43ம் வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கங்குவா ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆனதும், சூர்யா 43 படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











