Suriya 43: நாம ஜெயிச்சிட்டோம் மாறா... அடுத்த தேசிய விருது வேட்டைக்கு ரெடியான சூரரைப் போற்று டீம்
சென்னை: சூர்யா தற்போது சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போது வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால் அதற்கு முன்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் சூர்யா.
இப்படத்தை சூரரைப் போற்று பிரபலம் சுதா கொங்கரா இயக்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் இணையும் சூரரைப் போற்று டீம்
சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவா இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக சூர்யாவின் 43வது படமான வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது.
முதன்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விடுதலை இரண்டாம் பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார் வெற்றிமாறன்.
ஆனால், அதில் சில காட்சிகள் திருப்தியாக இல்லாததால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தவுள்ளாராம். இதனால் விடுதலை 2ம் பாகம் அடுத்தாண்டு தான் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தாண்டு இறுதிக்குள் வாடிவாசல் ஷூட்டிங்கை தொடங்கலாம் என முடிவு செய்திருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறனால் விடுதலை 2ம் பாகம் ரிலீஸாகும் வரை வாடிவாசல் படத்தை இயக்க முடியாது.

இதனால் அதிரடியாக முடிவெடுத்த சூர்யா, சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளாராம். டெக்கான் ஏர் லைன்ஸ் கோபிநாத்தின் பயோபிக்காக உருவான சூரரைப் போற்று 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வென்று மாஸ் காட்டியிருந்தது. சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜிவி பிரகாஷ், சுதா கொங்கரா ஆகியோர் தேசிய விருது வென்றனர். அப்போது முதலே இக்கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வாடிவாசல் ஷூட்டிங் லேட்டாகும் என்பதால் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் இந்தப் படம் பீரியட் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் விரைவில் சூர்யா 43 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











