Suriya 44: சூர்யா போட்ட புது கணக்கு... வாடிவாசலுக்கு முன் சூர்யா 44... ரெடியான அயலான் ரவிக்குமார்!
சென்னை: சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கும் தனது 43வது படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக சூர்யா நடித்த கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சூர்யா 43-ஐ தொடர்ந்து வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சூர்யாவுடன் அயலான் இயக்குநர் ரவிக்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயலான் ரவிக்குமார் கூட்டணியில் சூர்யா 44
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பீரியட் ஜானரில் 3டி டெக்னாலஜியில் தயாராகியுள்ள கங்குவா 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கங்குவா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பை முடிக்கவில்லை. விடுதலை 2 முடிந்த பின்னர் வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து முடிவெடுக்கவுள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் வாடிவாசலில் அமீர் நடிக்கவிருப்பதால் சூர்யா அதிலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால், அது உண்மை இல்லை என்றும் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் தான் வாடிவாசல் உருவாகும் எனவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் தனது 43வது படத்தை முடித்துவிடலாம் என சூர்யா பிளான் செய்திருந்தார். அதன்படி சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, மேலும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுவும் வாடிவாசலுக்கு முன்பே முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
இன்று நேற்று நாளை, அயலான் மூலம் கவனம் ஈர்த்த ரவிக்குமார், சூர்யாவின் 44வது படத்தை இயக்கவுள்ளாராம். ஏற்கனவே சூர்யாவுக்கு ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையை சொல்லி சம்மதம் வாங்கி வைத்திருந்தார் ரவிக்குமார். இப்போது சூர்யா 43 ஷூட்டிங் தினமும் நடைபெற்று வருவதால், விரைவில் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறதாம். அதோடு வாடிவாசல் தொடங்கவும் கொஞ்சம் தாமதமாகும் எனத் தெரிகிறது.
இதனால் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா 44 படப்பிடிப்பை தொடங்க படக்குழு ரெடியாகிவிட்டதாம். அதன்படி ஏப்ரல் மாதம் சூர்யா 44 ஷூட்டிங் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ரவிக்குமார் தற்போது ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. சூர்யா 44 படம் பற்றிய அபிஸியல் அப்டேட் மார்ச் இறுதிக்குள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











