Suriya 44: சூர்யா 44 படத்தின் டைட்டில் இதுதானா?.. பிறந்தநாள் பரிசு சும்மா தாறுமாறா இருக்கே!
சென்னை: நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:12 மணிக்கு சூர்யா 44 படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தாறுமாறான க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. டைட்டில் டீசர் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா ஆரம்பத்தில் சினிமாவில் தட்டுத் தடுமாறி நடித்து வந்த நிலையில், பாலா இயக்கத்தில் வெளியான நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் அவரை நடிப்பின் நாயகனாகவே மாற்றின.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க, ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் சீரிஸ் படங்கள், கே.வி. ஆனந்த் இயக்கிய அயன் உள்ளிட்ட படங்கள் சூர்யாவை தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக மாற்றியது.
ஹேப்பி பர்த்டே சூர்யா: நடிகர் சிவகுமாருக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் மகனாக 1975ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி சென்னையில் பிறந்தார். பல படங்களில் முருகனாக நடித்த சிவகுமார் தனது மூத்த மகனுக்கு சரவணன் என்றும் இளைய மகனுக்கு கார்த்தி என்றும் பெயர் வைத்தார். சினிமாவில் அறிமுகமாகும் போது தான் சரவணன் சூர்யாவாக உதயமானார். இன்று தனது 49வது பிறந்தநாளை நடிகர் சூர்யா கொண்டாடி வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா 44 டைட்டில் என்ன?: கங்குவா படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பாரா? சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடிப்பாரா? கர்ணன் எனும் பாலிவுட் படத்தில் நடிப்பாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து வந்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் தரமான படத்தைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜை நம்பி டிக் செய்து சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சூர்யா 44 படத்தின் டைட்டில் 'தி ஒன்'னாக இருக்குமா? என்கிற கேள்வி தற்போது வெளியாகி இருக்கும் க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் எழுந்துள்ளது. ஆனால், விரைவில் டைட்டில் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில், வேறு டைட்டில் இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 'தி கோட்' என விஜய் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், 'தி ஒன்' என சூர்யா படத்துக்கு டைட்டில் வைத்தாலும் செமையாத்தான் இருக்கும் என்கின்றனர்.
கங்குவா ஃபயர் சாங்: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் பரிசாக சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் முதல் சிங்கிளான கங்குவா ஃபயர் சாங் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக காத்திருக்கிறது. இன்று முழுவதுமே சோஷியல் மீடியா மொத்தமும் சூர்யா ரசிகர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என தெரிகிறது.
பாக்ஸ் ஆபிஸை பிடிப்பார்: கங்குவா, சூர்யா 44 என அடுத்தடுத்த கமர்ஷியல் படங்கள் மூலமாக பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக நடிகர் சூர்யா மாறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள அந்த படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











