Exclusive: சூர்யாவின் பெண்டை நிமிர்த்தும் RJ பாலாஜி! சக்சஸ் கொடுக்க வெறித்தனமான வேலை.. கோதண்டம் பளீச்

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான கங்குவா படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் படு தோல்விப்படமாக மாறியது. இதனால், சூர்யாவுக்கு அடுத்த வெற்றி என்றால் அது, இப்போதைக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ படம்தான். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சூர்யா தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகின்றார். RJ பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, த்ரிஷா நடித்து வருகின்றார். அந்தப் படத்தில் நடித்த கோதண்டன் நமது பிலிமி பீட் சேனலுக்கு பேட்டு கொடுத்துள்ளார். அதில் சூர்யா 45 குறித்து அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள படம், ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. ரெட்ரோ சூர்யாவின் 44வது படம். தனது 45வது படத்தில் சூர்யா RJ பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

suriya 45 rj balaji kothandam 45 rj

படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் கோதண்டம் நமது பிலிமி பீட் யூடியூப் சேனலின் The Friday Show நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூர்யா 45 குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, படத்தின் இயக்குநர் RJ பாலாஜி மிகவும் தைரியமான அதேநேரத்தில் திறமையான இயக்குநராக உள்ளார். ஒரு காட்சி தான் நினைப்பதைப்போல் வரவில்லை என்றால் அது யாராக இருந்தாலும் விடாமல் ரீ டேக் வாங்குகின்றார். சூர்யாவாக இருந்தாலும் அவரிடம் ரீடேக் கேட்க RJ பாலாஜி தயங்குவதில்லை.

suriya 45 rj balaji kothandam 45 rj

RJ பாலாஜி: உதாரணமாக ஒரு காட்சியினை படம் பிடிக்கும்போது ஒரு டேக்கில் ஒரு பொருள் உள்ளது. அடுத்த டேக் எடுப்பதற்குள் அந்தப் பொருள் உடைந்துவிட்டது என்றால், மீண்டும் அதுபோல மற்றொரு பொருள் வரும்வரை காத்திருக்கின்றார். அந்த பொருள் இல்லாமல், அந்த ஷாட்டினை எடுக்க மாட்டேன் எனக் கூறும் இயக்குநராக உள்ளார்.

suriya 45 rj balaji kothandam 45 rj

கல்லூரி மாணவர்கள்: எனக்கும் சூர்யா சாருக்கும் ஒரு காம்பினேஷன் காட்சி உள்ளது. படம் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறுகின்றது. எனவே படப்பிடிப்பு நடைபெறும் போதெல்லாம், கல்லூரி மாணவர்கள், ஆயிரக்கணக்கில் அவரைச் சூழ்ந்து கொள்கின்றார்கள். RJ பாலாஜி படத்தின் கதையில் இருக்ககூடிய கதாபாத்திரங்களுக்கு கூடுமானவரை வெயிட்டேஜ் கொடுத்துள்ளார். மேலும் தான் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்களை முழுமையாக நம்புகின்றார். நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு ஒரு காட்சியில் நல்ல வெயிட்டேஜான காட்சி உள்ளது. அதனால் எனக்கு க்ளோசப் வைத்துள்ளார்.

suriya 45 rj balaji kothandam 45 rj

திருப்தி: ஒரு காட்சியை திருப்திகரமாக படமாக்கி முடித்த பின்னர்தான் பேக் அப்பே சொல்கின்றார். இந்தப் படம் கட்டாயம் RJ பாலாஜி இயக்கத்திலும் சூர்யாவின் நடிப்பிலும் கட்டாயம் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. படம் கல்லூரியில் படமாக்கப்பட்டதால், மாணவர்களும் ரசிகர்களும் அவருடன் புகைப்படம் எடுக்க, கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டருக்கு வரிசையாக நிற்கின்றார்கள்" என பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X