வாழ்க்கை ஒரு வட்டம்.. விஜய் டயலாக் திரிஷாவுக்கு நல்லா செட்டாகிடுச்சே.. சூர்யா கொடுத்த கிஃப்ட் செம!
பொள்ளாச்சி: நடிகை திரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். பல ஆண்டுகளாக அவர் அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த நிலையில் தற்போது தன்னுடைய ரீஎன்ட்ரியில் மீண்டும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஆண்டில் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டில் விஜய்யுடன் கோட் படத்தில் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டிருந்தார். இதனிடையே அடுத்தடுத்து அஜித் நடிப்பிலும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் திரிஷா நடிப்பில் வெளியாகவுள்ளன. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா 45 படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார் திரிஷா.

நடிகர் சூர்யா: சூர்யாவின் நடிப்பில் கங்குவா படம் கடந்த மாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் 11,000 திரையரங்குகளில் ரிலீசானது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார். படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் படக்கழுவினரும் அதிகப்படியான ப்ரமோஷன்களை ஏற்படுத்தினர். ஆனாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.
சூர்யாவுடன் நடிகை திரிஷா: இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாகவும் இந்த மாதத்திலேயே படத்தின் ப்ரோமோஷன்களை துவங்கவுள்ளதாகவும் முன்னதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய சூரியா 45 படத்தின் ஷூட்டிங்கிலும் சூர்யா இணைந்துள்ளார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா இணைந்துள்ளார்.
திரிஷாவின் 22 ஆண்டுகால சினிமா: படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே பொள்ளாச்சியில் பூஜையுடன் துவங்கிய நிலையில் இன்றைய தினம் படத்தின் சூட்டிங்கில் திரிஷா இணைந்துள்ளார். திரிஷா சினிமாவிற்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை நேற்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் சூர்யா 45 டீம் இன்றைய தினம் திரிஷாவின் 22 ஆண்டுகால சினிமா பயணத்தை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதற்காக திரிஷாவிற்கு கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்திருந்தனர்.

வாழ்க்கை ஒரு வட்டம்: கேக் கட்டிங்கின்போது வாழ்க்கை ஒரு வட்டம் என்று திரிஷா கூறியதை பார்க்க முடிந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த திரிஷா, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். வாழ்க்கை ஒரு வட்டம் என்ற டயலாக் திரிஷாவிற்கு தற்போது சிறப்பாக பொருந்தி உள்ளது. இந்த வீடியோவில் சூர்யா, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காணப்படுகிறார். படம் ஆன்மிகம் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் கதைக்களம் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











