ஆர்ஜே பாலாஜியை விஜய் வேண்டாமென சொல்ல இதுதான் காரணமா?.. சூர்யா 45 படம் இந்த குலசாமி கதையா?

சென்னை: எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக மாறிய காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறினார். மூக்குத்தி அம்மன் 2வுக்கு பதிலாக மாசாணி அம்மன் படத்தை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த படத்தில் த்ரிஷா நடிக்கப் போவதாக கூறப்பட்டது.

ஆனால், திடீரென விஜய்யிடம் இருந்து அழைப்பு வர அதற்காக அந்த படத்தின் கதையை ஹீரோவுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்திருக்கிறார் ஆர்ஜே பாலாஜி என சில தகவல்கள் கசிந்துள்ளன.

suriya rj balaji suriya 45


விஜய் சாமி படத்தில் எல்லாம் நடிக்கலாமா? செட்டாகுமா? என யோசித்த நிலையில், அதை வேண்டாம் என ஒதுக்கி விட்டார் என்றும் அந்த படத்தில் தான் தற்போது சூர்யா நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஆர்ஜே டு ஹீரோ: தமிழ் சினிமாவில் முயன்றால் முன்னேறலாம் என்பதை அந்த காலத்தில் இருந்து இப்போ வரை பலரும் சாதித்துக் காட்டியுள்ளனர். கண்டக்டராக இருந்தவர் சூப்பர் ஸ்டார் ஆக மாறிய நிலையில், ஸ்டாண்டப் காமெடியனாக விஜய் டிவியில் நுழைந்த சிவகார்த்திகேயன் இன்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். ஆர்ஜேவாக பணியை தொடங்கிய பாலாஜி காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து ஹீரோவாகவும் இயக்குநராகவும் மாறியுள்ளார்.

suriya rj balaji suriya 45

வேண்டாமென சொன்ன விஜய்: ஆர்ஜே பாலாஜிக்கு திடீர் ஜாக்பாட்டாக விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பே கிடைத்தது. தளபதி 69 படத்தை எச். வினோத்துக்கு முன்னதாக ஆர்ஜே பாலாஜியை வைத்தே பண்ண விஜய் முடிவெடுத்திருந்தார். ஆனால், ஆர்ஜே பாலாஜி சொன்ன கதை தனக்கு செட்டாகுமா? என்கிற டவுட் வந்த நிலையில், விஜய் வேண்டாமென சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முனியாண்டி படமா?: சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி சூர்யா 45 படத்தை இயக்கப் போவது உறுதியாகி உள்ளது. விஜய்க்கு சொன்ன கதையில் தான் சூர்யா நடிக்கவுள்ளார் என்கின்றனர். மாசாணியம்மன் என உருவாக்கிய கதையைத் தான் நடிகருக்காக பட்டி டிக்கெரிங் செய்து ஆர்ஜே பாலாஜி மாற்றியதாக கூறுகின்றனர். முனியாண்டி எனும் குலசாமியின் கதையை படமாக்கப் போகிறார் ஆர்ஜே பாலாஜி என்கிற பேச்சுக்களும் சினிமா வட்டாரத்தில் உலா வருகின்றன. என்ன மாதிரியான படம் என்பது டீசர் மற்றும் டிரெய்லர் வரும் போது தெரிந்து விடும். கங்குவா படத்தில் சூர்யா நடித்த நிலையில், சாமி படத்திலும் நடிக்க தயாராகி விட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X