பக்கா பிளான்.. சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதும் சூர்யா.. மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டாங்க
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் கருப்பு. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தாலும் படக்குழு தரப்பில் இருந்து முழுக்க முழுக்க கப்சிப் ஆகத்தான் உள்ளது. இப்படி இருக்கையில் நடிகர் சூர்யாவின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை என்றாலும் அதன் ரிலீஸ் தேதியை முடிவு செய்து விட்டார்களாம்.
அதாவது சூர்யாவின் 46 வது படம் தான் கருப்பு. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது 47ஆவது படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார் என்ற தகவல் ஏற்கனவே திரையுலகில் வலம் வந்து கொண்டு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு நிர்ணயம் செய்து விட்டதாம்.

பொங்கல் போட்டி: அதாவது படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த பொங்கலில் ரிலீஸ் தேதி என்பதை முடிவு செய்வதற்கு முன்னர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் ஏதாவது படம் இருக்கிறதா என்று தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மொத்த தென்னிந்திய சினிமா உலகையும் ஒரு அலசு அலசிப் பார்த்துள்ளார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வரவில்லை என்று அவர்களுக்கு முடிவுகள் கிடைக்க, பொங்கலில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
ரஜினியுடன் மோதலா?: இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் உலா வர, தற்போது மொத்த கோலிவுட்டும் இது குறித்து தான் பரபரப்பாக பேசி வருகிறாகள். காரணம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ் கமல் புரெடக்ஷன்ஸ் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற அறிவிப்புடன் தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. இது ஹாலிவுட் படமான அவுட் ஃபிட் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சூப்பர் ஸ்டார் படமும், சூர்யா படமும் மோதவுள்ளதா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











