Suriya: போஸ்டர் ஒட்டிய ரசிகர்களுக்கு ட்ரீட்! சூர்யா பிறந்த நாளுக்கு வரப்போகும் அப்டேட்கள் லிஸ்ட்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரை திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து உறையடும்போடு எல்லாம் தவிர்க்க முடியாத கதாபாத்திரமாக அது அமைந்தது. ஆனால் இதனையே ரசிகர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் சொல்லி சமாளிக்க முடியும். இவரது படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இவரது நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் கங்குவா படம் உருவாகி வருகின்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படம் சூர்யாவின் 42வது படமாகும். இந்த படத்தில் கல்கி 2898 ஏ.டி படத்தில் நடித்த நடிகை தீஷா பதானி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைத்து வருகின்றார். மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கிலிம்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Suriya

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ்: அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் 'சூர்யா 44' என தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் கதையை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு முன்னரே தயாராக வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். நடிகர் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அவர்களுடன் ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதையடுத்து இவர் தனது 43வது படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது.

Suriya

புறநானூறு? புறநானூறு படம் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்னரே சூர்யா தனது 44வது படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 2ம் தேதி முதல் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சூர்யா - பூஜா ஹெக்டேவின் காம்போவில் இரண்டு பாடல்கள் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது எனவும் பாடல் காட்சிகளுடன் சேர்த்து சில சண்டைக் காட்சிகளும் அங்கே படமாக்கபட்டுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யா 44 ஒரு அதிரடியன ஆக்‌ஷன் படம் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளை ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ இயக்கி வருகின்றாராம். இது சூர்யாவின் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என படக்குழு நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் ஆச்சரியப்படும் செய்தி என்னவென்றால், சூர்யாவின் ஒத்துழைப்பைப் பார்த்து ஃபைட் மாஸ்டர் கீசா காம்பக்டீ பாராட்டியுள்ளாராம்.

Suriya

முதற்கட்ட படிப்பிடிப்பு: அந்தமானில் திட்டமிட்டபடி சூர்யா 44 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை 30 நாட்களில் படக்குழு முடித்து விட்டதாகவும் இதனால் சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகள் முதற்கட்ட படப்பிடிப்பிற்கானது படமாக்கப்பட்டாகிவிட்டது எனவும் கூறப்படுகின்றது. மற்ற நடிகர்களின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பின்னர் படக்குழு சென்னை திரும்பியதும் சிறிது காலம் பிரேக் எடுத்து கொண்ட பிறகு மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை ஊட்டியில் நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

Suriya

மூன்று அப்டேட்: வரும் ஜூலை 23ம் தேதி நடிகர் சூர்யா தன்னுடைய 49 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஜூலை 23ம் தேதி வெளியிட உள்ளது படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோவும் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றது. இதனால் சூர்யா படத்தின் அப்டேட்டுகள் வரவுள்ள தகவல், சூர்யா படத்தின் அப்டேட் கேட்டு போஸ்டர் ஒட்டிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருகும் எனவும் இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X