சூப்பர் சூர்யா.. இந்த விஷயத்தை விஜய், அஜித் கூட பண்ணல.. எல்லாமே கங்குவா கலெக்‌ஷனுக்குத்தானா?

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். பாபி தியோல் மற்றும் திஷா பதானி என பாலிவுட் நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும், நட்டி நட்ராஜ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ் என பல்வேறு பிரபலங்கள் கங்குவா படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இதுவரை 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

suriya kanguva vijay

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக வரும் அக்டோபர் 26ம் தேதி நடைபெறுகிறது. சமீபத்தில் மும்பையில் நடிகர் சூர்யா செய்த மாஸ் புரமோஷன் கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பான் இந்தியா ஸ்டார்: டோலிவுட் மற்றும் கன்னடத்தில் இருந்து சில ஹீரோக்கள் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளனர். கோலிவுட்டில் பான் இந்தியா ஸ்டாராக மாற முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டோர் பெரிதாக முயற்சி செய்யவில்லை. தனுஷ் தனியாக ஒவ்வொரு மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார். சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என யாருமே இன்னமும் அந்த இடத்தை அடைய பிளான் செய்யவில்லை. ஆனால், சூர்யா செம ஷார்ப்பாக பான் இந்தியா ஸ்டாராக களமிறங்க வேண்டும் என்கிற முயற்சியை கங்குவா படத்தின் மூலம் கையில் எடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் கூட: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் ரசிகர்களை வியக்க வைத்த நிலையில், பான் இந்தியா ரசிகர்களை அந்த படம் பெரிதளவில் டார்கெட் செய்யாத நிலையில், மற்ற இடங்களில் படம் பெரிதாக வசூல் வேட்டையாடவில்லை என்றும் கூறுகின்றனர். ஐஸ்வர்யா ராய் நடித்தும் இந்தியில் அந்த படத்துக்கு பெரிய வரவேற்பில்லை. விஜய், சூர்யா போல பெரிய ஹீரோக்கள் நடித்திருந்தால், அதை நிச்சயம் பான் இந்தியா படமாக புரமோட் செய்திருக்க முடியும் என்கின்றனர்.

suriya kanguva vijay

கங்குவா கலெக்‌ஷன் முக்கியம்: சூர்யா கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து திட்டமிட்ட நிலையில், கிடைத்துள்ள நேரத்தை சரியாக புரமோஷனுக்கு செலவு செய்ய முடிவு செய்துள்ளார். பாலிவுட்டில் 20 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து புரமோஷன் செய்து வருகிறார்கள். இந்தி பெல்ட்டில் இருந்து தமிழ் படங்களுக்கு வசூலே 20 கோடி வராமல் உள்ள நிலையில், புரமோஷனுக்கே அவ்வளவு பெரிய தொகை செலவு செய்ய காரணமே பல நூறு கோடிகளை இந்தி பெல்ட்டில் இருந்து அள்ளும் திட்டத்துடனே சூர்யா செய்து வருவதாக கூறுகின்றனர். கங்குவா படத்தின் கலெக்‌ஷனை படக்குழு பெரிதும் நம்பியுள்ள நிலையில், சூர்யாவின் பான் இந்தியா ஹீரோ பில்டப் சரியாக அமைந்து விட்டால் மற்ற நடிகர்களும் அதை ஃபாலோ செய்வார்கள் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X