கங்குவா ஆடியோ லான்ச்சில் வேட்டையன் ஃபார்முலா.. செம ஆட்டம் போட்ட சூர்யா, தேவிஸ்ரீ பிரசாத்

சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கிறார். முதலில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ரஜினியின் வேட்டையன் ரிலீஸாவதால் அதற்கு மரியாதை கொடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா தெரிவித்திருந்தார். நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதிலிருந்து விலகிய சூர்யா; சிவாவின் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். சிவா இயக்கிய அண்ணாத்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததன் காரணமாக சூர்யாவை வைத்தும் சிவா செய்துவிடுவாரோ என்றே ரசிகர்கள் ஓபனாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். ஆனாலும் படத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஒருபக்கம் இருக்கவும் செய்தது.

kanguva suriya devi sri prasad

சூப்பர் அப்டேட்டுகள்: அந்த நம்பிக்கை பொய்த்துப்போகாத வகையில் படத்தின் க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பெயர் என அனைத்துமே இருப்பதாக சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சிவா சூர்யாவை வைத்து எந்த சொதப்பலும் செய்திருக்கமாட்டார் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் படம் என்பதும்; படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாகங்கள் கங்குவா: கங்குவா படம் பீரியட் ஜானரில் உருவாவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை; தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருப்பதாகவும்; அதன் ஷூட்டிங்கை மொத்தமாகவே சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. முக்கியமாக இப்படத்தில் கார்த்தியும் ஒரு ரோல் செய்திருப்பதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு மரியாதை: இப்படி எக்கச்சக்க ஹைப்போடு கங்குவாவுக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முதலில் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படம் ரிலீஸாவதால்; மூத்தவர் ரஜினிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கங்குவா ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா தெரிவித்திருந்தார். அதன்படி படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகிறது.

ஆட்டம் போட்ட சூர்யா, தேவி ஸ்ரீ பிரசாத்: இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அதில் தேவி ஸ்ரீ பிரசாத்தும் கலந்துகொண்டார். வழக்கம்போல் அவர் இந்த ஆடியோ லான்ச்சிலும் செம எனர்ஜியோடு இருந்தார். நேராக மேடைக்கு வந்தவர் தனது பாணியில் அட்டகாசமாக பாடல் பாடினார். மேலும் கீழே அமர்ந்திருந்த சூர்யாவிடம் சென்று நடனம் ஆடினார். உடனே உற்சாகமான சூர்யாவும் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து நடனம் ஆடினார்.

வேட்டையன் ஃபார்முலா: அதனையடுத்து மேடையில் பேசிய தேவிஸ்ரீ பிரசாத், 'சூர்யா மிகச்சிறந்த நடிகர். இந்த மாதிரியான படத்தில் பணியாற்ற அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஆசை இருக்கும். அது எனக்கு இதில் நிறைவேறியிருக்கிறது. எவ்வளவுதான் படத்தில் டெக்னீஷியன்கள் வேலை செய்தாலும் ஒரு கதாநாயகர்தான் அந்தப் படத்தின் முகம். சூர்யா அனைவரையும் சமமாக மதிப்பவர்' என்றார். இதற்கிடையே சூர்யாவும், தேவிஸ்ரீ பிரசாத்தும் நடனமாடியதை பார்த்த ரசிகர்கள், அட வேட்டையனில் அனிருத்தும், ரஜினியும் நடனமாடியது போன்று இதிலும் அந்த ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X