Suriya 48: சூர்யா VS த.செ.ஞானவேல்.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. வேட்டைக்கு ஹொம்பாலே பிலிம்ஸ்!

சென்னை: நடிகர் சூர்யாவின் 48-வது திரைப்படமான 'S48' குறித்த அதிகாரப்பூர்வ மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'ஜெய்பீம்' படத்திற்குப் பிறகு, இயக்குனர் த.செ.ஞானவேல் மற்றும் சூர்யா மீண்டும் இணையும் புதிய மெகா பட்ஜெட் படத்தை இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த 'ஹொம்பாலே பிலிம்ஸ்' முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்திருப்பது இந்திய திரையுலகில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Suriya 48 TJ Gnanavel 48

அதிரடியான கூட்டணி: சூர்யாவின் 48-வது படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டது. இதில் பேசிய தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், வணிக வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேரப் பெறும் அசாத்திய திறமை கொண்டவர் சூர்யா. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்களைக் கொண்டாடும் 'The One' சூர்யா மற்றும் அழுத்தமான கதைகளை செதுக்கும் த.செ.ஞானவேல் ஆகிய இருவரையும் எங்களது ஹொம்பாலே குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த படத்தில் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று மாஸாகபேசினார்.

Suriya 48 TJ Gnanavel 48

சாய் அபயங்கர் இசை: சாய் அபயங்கர் இசையில், தென்னிந்திய மொழிகளில் செம ட்ரெண்டாகி வரும் இளம் நடிகை கயாது லோகர் சூர்யாவுக்கு ஜோடியாகக் களம் இறங்குகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற நடிப்பின் அசுரர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, விக்ரம், லியோ படங்களின் எடிட்டர் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார். கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், பா. கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிக்கின்றனர். இத்திரைப்படம் பான் இந்தி திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜூலை மாதம் 22-ஆம் தேதி முதல் விறுவிறுப்பாகத் தொடங்கவுள்ளது.

Read more about: tj gnanavel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X