பெஸ்ட்.. பெஸ்ட்.. தீபாவளிக்கு புது விளம்பரம்.. சூர்யாவின் கங்குவா பாடலை பங்கமாக்கிய ஃபேன்ஸ்!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கிளான யோலோ பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. அதே வேகத்தில் அந்த பாடலை சூர்யாவின் ஹேட்டர்கள் எப்படியெல்லாம் கலாய்க்க முடியுமோ கலாய்த்து வருகின்றனர்.

தீபாவளி நெருங்கி வருவதால் சரவணா ஸ்டோர்ஸின் புதிய விளம்பரம் வந்துடுச்சு என பெஸ்ட்.. பெஸ்ட் என பாடலை போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர். கங்குவா படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரில் சூர்யாவின் லேட்டஸ்ட் லுக்கை காட்டாமல் வெறும் பீரியட்டை மட்டும் காட்டியே சிறுத்தை சிவா பில்டப் செய்து வந்த நிலையில், சூர்யாவின் புதிய தோற்றத்தையும் தற்போது இந்த பாடல் மூலம் ரிவீல் செய்துள்ளனர்.

kanguva suriya disha patani

அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யாவின் தோற்றம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், அஞ்சான் 2வாக படம் ஆகாமல் இருந்தால் சரி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு மில்லியன் வியூஸ்: கங்குவா படத்தின் யோலோ பாடல் வெளியாகி 3 மணி நேரத்தில் ஒரு மில்லியன் வியூஸை அள்ளியுள்ளது. மகதீரா படம் போல இந்த படம் இருக்குமா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். ஆனால், இந்த படத்தில் 2 மணி நேரம் பீரியட் போர்ஷன் என்றும் 20 நிமிடங்கள் மட்டுமே கரன்ட் போர்ஷன் என்றும் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

kanguva suriya disha patani

இதிலும் பவுண்டி ஹண்டர்?: கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் வருவதை போலவே இதிலும் பவுண்டி பெயர் பயன்படுத்தப்பட்டு இருப்பது பாடல் மூலம் தெரிய வருகிறது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி எல்லாம் பவுண்டி என்றே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், கல்கி படம் போலவே கங்குவா படமும் இருக்குமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

kanguva suriya disha patani

தீபாவளிக்கு புது விளம்பரம்: கோவா பீச்சில் திஷா பதானியுடன் ஜாலியாக சூர்யா கவர்ச்சி உடையில் ஆட்டம் போடும் பாடலை பார்த்த ரசிகர்கள் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தீபாவளிக்கு புதுசா விளம்பரம் இறக்கியிருக்காரு பாருங்க என "பெஸ்ட் பெஸ்ட்" பாடலை எடிட் செய்து போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். வேட்டையன் படத்தை பண்ணது போல ஹேட்டர்கள் கங்குவா படத்தையும் வச்சு செய்து விட்டால் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் மிகப்பெரிய சோதனைகளை சந்திக்கும் நிலை வந்து விடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X