'சூர்யா 47' படத்தின் வெறித்தனமான அப்டேட்.. டைட்டிலே சும்மா சரவெடியாக இருக்கே!

சென்னை: கருப்பு படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து இருக்கும் நடிகர் சூர்யா, அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், ரோமாஞ்சம், ஆவேசம் போன்ற மலையாள பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா தனது 47-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த படத்திற்கு 'சூர்யா 47' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அதிரடி டைட்டில் ஒன்று தற்போது லீக்காகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ழகரம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த 2025 டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்த இயக்குநர் ஜித்து மாதவன், இந்த படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Suriya 47 Jithu Madhavan Title 47
Photo Credit:

அதிரடியான டைட்டில்: இந்த படம் மலையாள பின்னணி இல்லாமல் தமிழ் உணர்வோடு, ஒரு பக்கா ஆக்ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் நடிகர் சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையில் செம்ம கலகலப்பான மற்றும் முற்றிலும் வித்தியாசமான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக, இந்த திரைப்படத்திற்கு 'சரவெடி' எனப் படக்குழு மாஸாகத் தலைப்பு வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. 'சரவெடி' என்ற டைட்டிலுக்கு ஏற்றாற்போலவே, படத்தில் சூர்யாவின் கேரக்டரும், காமெடியும் தியேட்டரில் சும்மா பட்டாசாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: title
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X