ஜோதிகாவின் மகளா இவங்க.. அம்மாவுக்கே செம டஃப் கொடுக்குறாங்களே
மும்பை: சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதேபோல் சூர்யாவும் நடிப்பில் பயங்கர பிஸியாக இருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.
வசந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். அந்தப் படத்தில்தான் சூர்யாவும், ஜோதிகாவும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார். அப்போதே இரண்டு பேருக்கும் காதல் உருவானது. தொடர்ந்து அவர்கள் காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்கள். இரண்டு பேரின் காதலுக்கு முதலில் சிவக்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் அவர்கள் இரண்டு பேரும் தங்கள் காதல் திருமணத்தில்தான் முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

நடந்த திருமணம்: இருவரும் வீட்டு சம்மதத்துக்காக பல வருடங்கள் காத்திருந்தார்கள். ஒருவழியாக சிவக்குமார் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அதில் திரையுலக நட்சத்திரங்கள், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டார்கள். சூர்யா - ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். சூர்யாவும், ஜோவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.
ஏன் ஃபேவரைட் ஜோடி: இரண்டு பேருமே ஒருவர் மீது ஒருவர் காதல் என்பதை தாண்டி நல்ல மரியாதையை வைத்திருக்கிறார்கள். பல மேடைகளில் ஜோதிகா தனது வெற்றிக்கு பின்னால் சூர்யா இருக்கிறார் என்றும்; அதேபோல் தனது வெற்றிக்கு பின்னால் ஜோதிகா இருக்கிறார் என்றும் சூர்யாவும் கூறியதுண்டு. முக்கியமாக திருமணத்துக்கு பின்பு நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் நடிப்பதற்கு சூர்யா ஃபுல் சப்போர்ட் செய்தார். அந்தவகையில் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜோ.
மும்பையில் செட்டில்: சூழல் இப்படி இருக்க இத்தனை வருடங்கள் சென்னையில் இருந்த அவர்கள் தற்போது மும்பைக்கு ஷிஃப்ட் ஆகியிருக்கிறார்கள். அதுகுறித்து சூர்யாவிடம் சமீபத்தில் கேட்டபோது, 'ஜோதிகா எனக்காக பல தியாகங்களை செய்திருக்கிறார். ஏன் அவருக்காக நான் மும்பை செல்லக்கூடாது என்று தோன்றியது. அதன் காரணமாகத்தான் மும்பையில் தற்போது செட்டில் ஆகியிருக்கிறோம்' என்று கூறினார். இதற்கிடையே சிவக்குமாருடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகத்தான் அவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தார்கள் என்று வதந்திகள் பரவின. ஆனால் அதிலெல்லாம் துளிக்கூட உண்மையில்லை என்று இரண்டு பேருமே தெள்ள தெளிவாக கூறி அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார்கள்.
ட்ரெண்டாகும் ஃபோட்டோ: சூர்யாவின் மகளும், மகனும் பெரும்பாலும் வெளியில் வராதவர்கள். அவ்வப்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகும். மகன் தேவ் சமீபத்தில்கூட கராத்தேவில் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா - ஜோதிகா தங்களது பிள்ளைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதில் தியாவும், தேவும் நன்றாகவே வளர்ந்திருக்கிறார்கள். முக்கியமாக தியாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அட ஜோதிகாவுக்கே தியா டஃப் கொடுக்குறாங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











