மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி.. கசிந்தது தகவல்!

சென்னை : திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சிறந்த ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.

இவர்கள் இருவரும் இணைந்து எண்ணற்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்க கடைசியாக சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சூர்யா அளித்துள் பேட்டி ஒன்றில், 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ள தகவல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல படங்களில் ஒன்றாக

பல படங்களில் ஒன்றாக

திரையில் கொண்டாடப்படும் ஜோடிகள் நிஜத்திலும் ஜோடியாக வலம் வருவது மிக அரிதாகவே காணப்படுகின்ற நிலையில் திரையில் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து சிறந்த ஜோடி என மக்களால் பாராட்டப்பட்ட சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

மாயாவி

மாயாவி

பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவரும் அதன்பின் காக்க காக்க, உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் என பலப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

36 வயதினிலே

36 வயதினிலே

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்ததன் பின் பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட பின் சிறிது காலம் படங்களில் நடிப்பதில் இருந்து தள்ளி இருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இப்பொழுது வெற்றிகரமாக திரையில் ஜொலித்து வருகிறார்.

பலரின் பாராட்டுக்கள்

பலரின் பாராட்டுக்கள்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாக்ஸ் ஆபீசை கலக்கிவரும் ஜோதிகா, தான் நடிக்கும் படங்களின் வாயிலாக சமூக பிரச்சினைகளையும் கையில் எடுத்து அதை சிறப்பாக கையாண்டு பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

மீண்டும் இணைய

மீண்டும் இணைய

திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சிறந்த ஜோடியாக இருந்து வரும் சூர்யா மற்றும் ஜோதிகா பல ஆண்டுகளாக இணைந்து நடிக்காமல் இருந்த நிலையில் இப்பொழுது மீண்டும் இணைய உள்ளதாக சூர்யா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில்

ஹலிதா ஷமீம் இயக்கத்தில்

மேலும் அத்திரைப்படத்தை சில்லுக்கருப்பட்டி இப்படத்தை இயக்கிய ஹலிதா சமீம் இயக்க உள்ளதாகவும், மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் திரைப்படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகின்ற நிலையில் இதைக் கேள்விப்பட்ட சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு பலருக்கும் பிடித்தமான நட்சத்திர ஜோடி மீண்டும் திரையில் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X