கணவரை பிரிகிறாரா ஜோதிகா.. விவாகரத்து செய்வது உண்மையா?

சென்னை: கோலிவுட்டில் எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திர தம்பதிகள் என்றால் அது சூர்யா ஜோதிகா தான். திருமணத்திற்கு பிறகு இவர்களைப் போன்று தான் வாழ வேண்டும் என அனைவரும் நினைக்கும் அளவுக்கு இருவரும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அண்மைக்காலமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகம் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் பரவி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக சூர்யா மற்றும் ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சேர்ந்து நடித்த போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அப்போதே இருவருக்குள்ளும் ஒரு வித கெமிஸ்ட்ரி வேலை செய்யத் தொடங்கியது. அதன் பின் நந்தா படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்து அசந்து போன ஜோதிகா, காக்க காக்க படத்தில், ஹீரோவாக சூர்யாவை பரிந்துரை செய்துள்ளார்.

 Suriya and Jyothika divorce rumours is the truth?

இவர்களின் காதல் விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளானதைத் தொடர்ந்து, அது சூர்யாவின் தந்தையான சிவக்குமாரின் காதுக்கு வந்ததும் குடும்பத்தில் பலமான எதிர்ப்பு வர, சூர்யா விடாப்புடியாக இருந்து ஜோதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் 2006ம் ஆண்டு திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நடிகை ஜோதிகா: திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று மாமனார் சிவக்குமார் ஆர்டர் போட்டதாகவும் இதனால், சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார் ஜோதிகா. ஆனால், நாட்கள் செல்ல செல்ல மீண்டும் படத்தில் நடிக்கும் ஆசை அவருக்கு வந்ததால், கணவர் சூர்யாவின் சம்மதத்துடன் 36 வயதினிலேயே படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல கம்பேக் கொடுக்கும் படமாக இருந்த போதும், குறிப்பிட்ட படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார்.

காதல் தி கோர்: அண்மையில், ஜோதிகா மம்மூட்டி ஜோடி போட்டு, காதல் தி கோர் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில், அரசியலில் நுழைய ஆசைப்படும் கணவனை விவாகரத்து செய்யும் பெண்ணாக ஜோதிகா ஓர் முக்கியமான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதை தமிழ் சினிமாவில் சில நடிகர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என்று சொன்ன மாமனாரின் பேச்சை மீறி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார் ஜோதிகா. ஹீரோ இல்லை, டூயட் இல்லை என்பதால் 36 வயதினிலே படத்தில் நடிக்க அனுமதித்தார் சிவக்குமார். ஆனால், அண்மையில் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடித்தது, மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆனதால் சூர்யா மீது சிவக்குமார் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், குடும்பத்தில் சண்டை ஏற்பட்டதாகவும், இதனால், சூர்யா ஜோதிகா இருவரும் பிரியும் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜோதிகா, மகன் மற்றும் மகள் இருவருமே மும்பையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் உயர்கல்வியில் அடியெடுத்து வைப்பதால், இந்த நேரத்தில் அவர்களோடு இருப்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கிறேன் இதுதான் மும்பையில் செட்டில் ஆக காரணம். இந்த வேலைகள் முடிந்த பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்பி விடுவோம் என்று ஜோதிகா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின் மூலம் சூர்யா ஜோதிகா பிரிந்துவிட்டதாக வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X