சூர்யா - ஜோதிகா ஜோடியா யாரு வீட்டுக்கு போயிருக்காங்க பாருங்க.. எல்சியூக்குள்ள பிரித்விராஜும் வராரா?

சென்னை: சினிமாவில் நடிகர்கள் எல்லாம் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் அவர்களுக்குள் எந்தவொரு சண்டையும் இருக்காது. போட்டி மட்டுமே இருக்கும். ஆனால், நடிகர்களின் பெயர்களை சொல்லிக் கொண்டு ரசிகர்கள் தான் சண்டை போட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா இருவரும் மலையாள நடிகர் பிரித்விராஜின் வீட்டுக்கு சென்ற போது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே சூர்யாவின் ரோலக்ஸ் கதை பற்றியே தனக்கு தெரியும். லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்காரு என பிரித்விராஜ் சொன்ன நிலையில் பகத் ஃபாசிலை தொடர்ந்து பிரித்விராஜும் எல்சியூவில் இணைய உள்ளாரா என கேள்விகள் எழுந்துள்ளன.

பிரித்விராஜ் வீட்டில் சூர்யா ஜோதிகா

பிரித்விராஜ் வீட்டில் சூர்யா ஜோதிகா

நடிகர் பிரித்விராஜ் வீட்டில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. Friends who inspire! என்கிற கேப்ஷன் உடன் நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த க்யூட்டான புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார்.

மலையாளத்தில் மம்மூட்டியுடன்

மலையாளத்தில் மம்மூட்டியுடன்

நடிகை ஜோதிகா மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி உடன் இணைந்து காதல் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மம்மூட்டி பிரியாணி சமைத்து நடிகர் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் பரிமாறிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. இந்நிலையில், மலையாள நடிகர் பிரித்விராஜ் வீட்டில் சூர்யா மற்றும் ஜோதிகா சென்று இருப்பது அடுத்த படத்திற்காகவா அல்லது நட்பு ரீதியாகவா என கேள்விகள் எழுந்துள்ளன.

பிரபாஸ் படத்தில் பிரித்விராஜ்

பிரபாஸ் படத்தில் பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ் மலையாள படங்களில் முன்னணி நடிகராக நடித்து வரும் நிலையில், மற்ற மொழி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபாஸின் சலார் படத்தில் நடித்து வரும் பிரித்விராஜ் தமிழிலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸுக்குள் வரவுள்ளார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ரோலக்ஸ் படத்தில்

ரோலக்ஸ் படத்தில்

விக்ரம் படத்தில் நடிகர் பகத் ஃபாசில் நடித்த நிலையில், தளபதி 67 படத்திலும் பகத் ஃபாசில் நடிக்கிறார் என்பது தெளிவாகி உள்ளது. இந்நிலையில், அடுத்து ரோலக்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய பிரித்விராஜ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒட்டுமொத்த லோகேஷ் யூனிவர்ஸ் பற்றியும் ரோலக்ஸ் கதை பற்றியும் சொல்லி உள்ளார் என பேசிய நிலையில், அதற்கான சந்திப்பா என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் விருப்பம்

ரசிகர்கள் விருப்பம்

சிறந்த நடிகர்களான இருவரும் ஒன்றாக இணைந்து விரைவில் திரையில் நடிக்க வேண்டும் என்றும் இருவரும் அவர்களின் பெஸ்ட் நடிப்பை தங்கள் படங்களில் கொடுத்து வருகின்றனர் என ரசிகர்கள் சீக்கிரமே சூர்யா மற்றும் பிரித்விராஜின் கூட்டணியை எதிர்பார்த்து வருவதை கமெண்ட் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

நடிகர் சூர்யா பிரித்விராஜின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழ் என்னவொரு சூப்பரான ஜோடி நீங்க உங்களுடன் நேற்று மாலை பொழுதை செலவிட்டது ரொம்பவே அருமையாக இருந்தது. இதுபோல நிறைய நினைவுகளை அடிக்கடி தொடர்வோம் எனக் கூறியுள்ளார். சூர்யா 42 படத்தில் பிரித்விராஜ் நடிக்கிறாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X