சூர்யா - ஜோதிகாவின் சாகச சுற்றுலா.. ரோப் கயிற்றில் ஜோ எப்படி தொங்கிட்டுப் போறாங்க பாருங்க!

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. அதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே இருந்த ஒரு சின்ன கேப்பில் தனது மனைவி ஜோதிகாவுடன் சாகச சுற்றுலா சென்றுள்ளார்.

சூர்யாவும் ஜோதிகாவும் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். 2டி நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பு பணிகளையும் இருவரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குடும்பத்துடன் கொஞ்சம் கோடை விடுமுறையை அனுபவித்து விட்டு வரலாம் என நினைத்த சூர்யா, ஜோதிகா இருவரும் சுற்றுலா சென்றுள்ள செம க்யூட்டான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

ஜோவுடன் ஜாலி ட்ரிப்

ஜோவுடன் ஜாலி ட்ரிப்

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா இருவரும் கோஸ்டா ரிகாவுக்கு செம ஜாலியான மற்றும் சாகச ட்ரிப் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்த இருவரும் காக்க காக்க பட சமயத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தியா எனும் மகளும் தேவ் எனும் மகனும் உள்ளனர்.

ரோப் கயிற்றில் ஜோ

ரோப் கயிற்றில் ஜோ

ரோப் கார் போல வெறும் ரோப் கயிற்றில் தொங்கியபடி நடிகை ஜோதிகா செய்துள்ள சாகச புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மேலும், சூர்யா மற்றும் ஜோதிகா ரப்பர் படகுகளை ஓட்டியும் தங்களது சுற்றுலாவை மறக்க முடியாத அனுபவமாக மாற்றி உள்ளனர். பெரும்பாலும் கோலிவுட் நடிகர்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை வெளியிடாமல் பிரைவசி கருதி பாதுகாத்து வருவது வழக்கம். ஆனால், சூர்யா - ஜோதிகாவின் கோஸ்டா ரிகா ட்ரிப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளன.

குறையாத லவ்

குறையாத லவ்

பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் என சூர்யாவுக்கு சினிமாவில் சரியான ஜோடியாக அமைந்த ஜோதிகா ரியல் லைஃப்பிலும் சரியான ஜோடி என்பதை இத்தனை ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். இருவருக்கும் இடையே உள்ள அந்த காதல் கொஞ்சமும் குறையாமல், அவர்கள் குழந்தைகளை போலவே இன்னமும் வளர்ந்து கொண்டே செல்வது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ரோலெக்ஸ்

ரோலெக்ஸ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கடைசியில் கிளைமேக்ஸில் ரோலெக்ஸாக வந்து மிரட்டி எடுத்திருப்பார் சூர்யா. அவருக்கு அன்பு பரிசாக தனது வாட்ச்சையே கழட்டிக் கொடுத்தார் கமல். சூர்யாவை படம் முழுக்க ரோலெக்ஸாக எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் இப்போதிலிருந்தே எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

சூர்யா 41

சூர்யா 41

பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடித்து வரும் படம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெற்றிமாறன் உடன் வாடிவாசல், சிறுத்தை சிவா உடன் ஒரு படம், ஜெய்பீம் ஞானவேல் உடன் ஒரு படம் லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் என ஏகப்பட்ட லைன் அப் சூர்யாவிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X