ஜோதிகா இல்லை.. சூர்யாவுடன் மும்பை விமான நிலையத்தில் அந்த பிரபல நடிகை.. டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: நடிகர் சூர்யா மும்பையில் புதிய படங்கள் மற்றும் கங்குவா படத்தின் புரமோஷன் என பிசியாக உள்ளார். சூர்யா கடந்த சில மாதங்களாக ஜோதிகாவை விட்டு பிரிந்து சென்னையில் இருந்து வந்த நிலையில், ஏகப்பட்ட விவாகரத்து வதந்திகள் ஜெயம் ரவி விவகாரத்துடன் சேர்ந்து தீயாக பரவின.

ஆனால், அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு ஜோதிகாவை தேடி சூர்யா மும்பைக்கு சென்றதும் அங்கே இருவரும் வெளியே தென்பட்ட புகைப்படங்களும் வெளியாகின.

suriya kajal agarwal kanguva

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார் சூர்யா. விமான நிலையத்தில் நடிகர் சூர்யாவை காஜல் அகர்வால் சந்தித்த புகைப்படங்கள் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

சூர்யாவுடன் இணைந்து: நடிகர் சூர்யாவுடன் இணைந்து மாற்றான் படத்தில் காஜல் அகர்வால் தனது நடிப்பில் மிரட்டியிருப்பார். இருவருக்கும் இடையேயான லிப் லாக் காட்சியை கூட சிஜி பயன்படுத்தி எடுத்திருப்பார்கள். விஜய்யுடன் துப்பாக்கி படத்தில் நடித்ததை போல சூர்யாவுடன் மாற்றான் படத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு வரவேற்கப்பட்ட நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பார்களா என்றும் கஜினி 2 படத்தில் அசின் நடிக்க வாய்ப்பில்லை என்பதால் காஜல் அகர்வால் இணைவாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

suriya kajal agarwal kanguva

விமான நிலைய சந்திப்பு: நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிட்ச்லு மற்றும் குழந்தையுடன் விமான நிலையத்திற்கு வரும் போது எதிர்பாராத சந்திப்பாக சூர்யாவும் விமான நிலையத்திற்கு வருவதை பார்த்துள்ளார். காஜல் அகர்வால் மற்றும் அவரது குடும்பத்தை பார்த்த சூர்யா ரொம்பவே ஹேப்பியாகி அவர்களுடன் உரையாடல்களை நடத்தினார். இதையெல்லாம் மும்பை புகைப்படக் கலைஞர்கள் க்ளிக் செய்து போட்டோக்களாக வெளியிட்டு இணையத்தை தீப்பிடிக்க வைத்துள்ளனர்.

கார்த்தியுடனும் நடித்த காஜல்: சூர்யாவுடன் மட்டுமின்றி கார்த்தியுடனும் காஜல் அகர்வால் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் செம காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பாட்டு பாடுகிறேன், நடனமாடுகிறேன் என அலப்பறை செய்து சிரிக்க வைத்திருப்பார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்த இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும்

suriya kajal agarwal kanguva

கங்குவா புரமோஷன்: கங்குவா படத்தை இந்தியில் ஓட வைத்தால் மட்டுமே பல கோடி பாக்ஸ் ஆபிஸை அள்ள முடியும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்பாகவே மும்பையில் ஞானவேல் ராஜா ஆபிஸ் அமைத்து உட்கார்ந்து விட்டார். சமீபத்தில், மும்பைக்கு சூர்யா சென்றதுமே அங்கே அவரை காண ஏகப்பட்ட ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்ட காட்சிகளும் டிரெண்டாகின. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள கங்குவா திரைப்படமாவது தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி வசூலை கொண்டு வந்து கொடுக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்தி படங்களில் கவனம்: தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து சூர்யா காதல் படமான சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 45 படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்தியில் தூம் 4 மற்றும் கஜினி 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க சூர்யா திட்டமிட்டு வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X