அண்ணன் சூர்யாவுடன் ஓட்டுப் போட வந்த தம்பி கார்த்தி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

சென்னை: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சென்னையில் உள்ள நிலையில், இன்னும் ஏன் வாக்களிக்க வரவில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இருவரும் ஒருசேர வந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் வாக்குச்சாவடிகள் காத்துவாங்கி வருவதாக காலை முதலே தேர்தல் ஆணையம் மக்களை விரைந்து வந்து வாக்குகளை செலுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வாக்களித்தார் சூர்யா

வாக்களித்தார் சூர்யா

நடிகர் சூர்யா டெனிம் ஷர்ட் அணிந்து வந்த நிலையில், திநகரில் உள்ள இந்தி பிரசார சபை வாக்கு மையத்தில் தனது வாக்கினை செலுத்தி உள்ளார். தற்போது அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. எதற்கும் துணிந்தவன் டீசர் நேற்று வெளியான நிலையில், சூர்யாவை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அண்ணனுடன் வந்த தம்பி

அண்ணனுடன் வந்த தம்பி

நடிகர் சூர்யா மற்றும் தம்பி கார்த்தி ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக உள்ள நிலையில், இருவரும் ஒன்றாக வாக்கு மையத்திற்கு வந்து தங்களது வாக்கினை செலுத்தினர். கருப்பு நிற டிசர்ட் அணிந்து நடிகர் கார்த்தி தனது வாக்கினை செலுத்தினார். இருவரும் பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படங்களுக்கும், ரசிகர்கள் எடுத்த புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்தனர்.

அப்பா எங்கே

அப்பா எங்கே

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஒன்றாக இணைந்து வந்து வாக்கு செலுத்திய நிலையில், அப்பா சிவகுமார், நடிகை ஜோதிகா உள்ளிட்ட குடும்பத்தினர் எங்கே என்கிற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. சூர்யா, கார்த்தி ஓட்டுப் போட்டு வந்த பிறகு மற்றவர்கள் மாலை நேரத்தில் வாக்கு செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்கும் துணிந்தவன் விரைவில்

எதற்கும் துணிந்தவன் விரைவில்

வரும் மார்ச் 10ம் தேதி நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட இரண்டு சிறந்த திரைப்படங்களும் ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், தியேட்டரில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது.

Recommended Video

முன்னொரு காலத்தில் Episode01 | Chitra Ramkrishna NSE | Himalayan Yogi | Oneindia Tamil
மற்ற மொழி டீசர்

மற்ற மொழி டீசர்

அஜித்தின் வலிமை படத்தைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படமும் பான் இந்தியா படமாக வெளியாகிறது. தமிழ் டீசர் நேற்று வெளியான நிலையில், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழி டீசர்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தெலுங்கு மொழியில் நடிகர் சூர்யாவே டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X