twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேசி பேசியே மரத்தை வளர வளர்த்த சூர்யா – கார்த்தி... சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்

    |

    சென்னை : யூட்யூப்பில் சொன்ன தகவவை வைத்து நானும், கார்த்தியும் தொடர்ந்து பேசி ஒரு மரத்தை வளர வைத்துள்ளோம் என உழவன் விருதுகள் விழாவில் சூர்யா சொன்ன தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த விழாவில் சூர்யா கேட்ட கேள்விகளுக்கு கார்த்தி சொன்ன பதில்களும் அனைவரையும் கவர்ந்தது.

    நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உழவன் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் யாரும் எதிர்பாராத விதமாக கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா திடீரென என்ட்ரி கொடுத்தார்.

    PS1: இப்படி எதிர்பார்க்கலயே.. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மிரட்டுறாங்களே!PS1: இப்படி எதிர்பார்க்கலயே.. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மிரட்டுறாங்களே!

    அகரம் ஃபவுண்டேஷன் துவங்கியது எப்படி

    அகரம் ஃபவுண்டேஷன் துவங்கியது எப்படி

    மேடையில் பேசிய சூர்யா, அகரம் பவுண்டேஷன் துவங்கி 18 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. கிட்டதட்ட 5000 மாணவர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். அப்பா கிராமத்தில் இருந்து கிளம்பி சென்னை வரும் போது பல குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருந்தனராம். அதே நிலை தான் 2006ம் ஆண்டு வரை தொடர்வது தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பல குடும்பங்களில் பெற்றோர் கூட இல்லாமல் இருந்தார்கள். அவர்கள் எப்படி படிப்பார்கள் என யோசித்த போது தோன்றியது தான் அகரம் ஃபவுண்டேஷன்.

    கடைக்குட்டி சிங்கம் சொன்ன மெசேஜ்

    கடைக்குட்டி சிங்கம் சொன்ன மெசேஜ்

    கார்த்தி எப்போதும் இயற்கையோடு வாழ விரும்புபவர். கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு விவசாயம் கஷ்டப்படும் தொழில் இல்லை. அது கெளரவமாக, கம்பீரமாக தலை நிமிட வேண்டிய தொழில் என்ற மெசேஜை கார்த்தியும், டைரக்டர் பாண்டிராஜும் அனைவருக்கும் சொன்னார்கள், விவசாயம் பற்றிய பல கேள்விகளை, விவசாயிகள் படும் கஷ்டங்களை அவர்கள் முன்வைத்தார்கள். இன்னும் எனது உறவினர்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    பேசியே மரத்தை வளர்த்தோம்

    பேசியே மரத்தை வளர்த்தோம்

    ஏதாவது செய்ய வேண்டும் என நாங்கள் யோசித்த போது 18 விஷயங்கள் முன் வைக்கப்பட்டது. அதில் விவசாயமும் ஒன்று. அப்படி கஷ்டப்பட்ட பலரிடம் நாங்கள் சென்று பேசிய போது அவர்கள் சொன்ன ஒரே விஷயம். எங்களுக்கு காசு பணம் வேண்டாம். எங்களின் குரலாக இருங்கள் போதும் என்றார்கள். அப்படி விவசாயிகளின் குரலாக இருக்க விரும்புகிறேன். எங்கள் வீட்டில் ஒரு மரம் வளராமலேயே இருந்தது. அதனை வெட்டி விடுங்கள் இனி வளராது என்றார்கள். மரத்திடம் பேசினால் மரம் வளரும் என யூட்யூப்பில் வீடியோவை பார்த்து நானும், கார்த்தியும் பேசிக் கொண்டே இருந்தோம். இன்று மிகப் பெரிய மரமாக வளர்ந்துள்ளது என்றார் சூர்யா.

    பெ்படி விவசாயம் கத்துக்கிட்ட

    பெ்படி விவசாயம் கத்துக்கிட்ட

    எப்படி விவசாயம் கத்துக்கிட்ட என மேடையில் கார்த்தியிடம் சூர்யா கேட்டார். அதற்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இதே சந்தேகம் எல்லோருக்கும் உள்ளது சார். அவர் வீட்டில் ஏதாவது தனியாக கோர்ஸ் படிக்கிறாரா என கேட்டனர். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொன்ன கார்த்தி, கவுண்டமணி சார் சொன்னது போல் இனி மேல் டிகிரி படித்தெல்லாம் விவசாயத்தை படிக்க முடியாது. இதற்கு எனக்கு கை கொடுத்தது அகரம் ஃபவுண்டேஷன் தான். அதற்காக நிறைய நிபுணர்களை சந்தித்து, ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பார்த்த போது தான் மண்ணை பற்றியும், விவசாயம் பற்றியும் புரிந்தது.

    English summary
    Today Uzhavan Viruthugal event held by actor Karthi's Uzhavan foundation. Actor Suriya attend this function as special guest. In this event, suriya and karthi's funny and admirable speeck attracts every one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X