Karuppu: வார்த்தை விளையாட்டில் சூர்யா - கார்த்தி.. கருப்பு பட கொடுத்த வெற்றியால் மாறி மாறி கலாச்சுக்கிறாங்களே

சென்னை: சூர்யா, த்ரிஷா, நட்ராஜ், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. படத்தை ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர்கர்கள் சூர்யாவும் கார்த்தியும் கருப்பு வெற்றிக் கொண்டாட்டத்தில் எக்ஸ் தளத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடி வருகிறார்கள்.

அதாவது கருப்பு படம் நன்றாக இருக்கிறது, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தென்னிந்திய திரையுலகில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அப்படி வாழ்த்துபவர்கள் நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து பாராட்டி வருகிறார்கள். அப்படி இருக்கையில் நடிகர் கார்த்தி மொத்த படக்குழுவினரையும் வாழ்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் தனது அண்ணனும் கருப்பு படத்தின் கதாநாயகனுமான சூர்யாவை டேக் செய்யவில்லை. மாறாக கருப்பா என்று மட்டும் எழுதி இருந்தார்.

சூர்யா - கார்த்தி: இவரது இந்த போஸ்ட்டை பார்த்த சூர்யாவோ பதிலுக்கு, " என் பேரு எங்க பா?" என்று கேள்வி எழுப்ப, அதற்கு கார்த்தியோ, "அதான் இருக்கேப்பா கருப்பா" என்று பதில் அளித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் சூர்யாவின் போஸ்ட்க்கு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியோ, கருப்பா என்று கார்த்திக் சார் சொன்னது உங்களைத்தான் சூர்யா சார் என்று கமெண்ட் போட்டுள்ளார்.

Suriya and Karthi Troll Each Other After Karuppu Success RJ Balaji Film Creates Buzz on X

விஜய் தேவரகொண்டா: அதேபோல், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்தி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த சூர்யா, விஜய் தேவரகொண்டாவிடம் ஜாலியாக இருக்க எங்கு செல்லலாம் என்று ஐடியா கொடுங்க என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் தேவரகொண்டாவும் பிரதமர் மோடி இந்த நேரத்தில் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். ஆனாலும் நான் உங்களுக்குச் சில ஐடியாக்களை கொடுக்கிறேன். அவற்றை எல்லாம் நான் வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறேன் அண்ணா என்று பதில் அளித்துள்ளார்.

படம் வசூலில் கலக்கி வருவதால் மொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படம் முதல் நாளில் ரூபாய் 128 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. வரும் காலங்களிலும் படம் அதிக அளவில் வசூல் குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X