அஜித்தின் வீடு தேடிச் சென்ற சூர்யா, கார்த்தி... தந்தை மறைவுக்கு இரங்கல்!
சென்னை: நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனையறிந்த நடிகர் விஜய் உடனடியாக நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், நடிகர்கள் கமல், விக்ரம், சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அஜித்தின் தந்தை மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.

தந்தையை இழந்த அஜித்
கோலிவுட்டின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் 24ம் தேதி அதிகாலை காலமானார். பக்கவாத பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சுப்ரமணியன் கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் தந்தை உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனையறிந்த நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

சூர்யா, கார்த்தி ஆறுதல்
மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், சிம்பு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சூர்யாவும் கார்த்தியும் அஜித் வீட்டிற்கு தற்போது நேரில் சென்று அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், தந்தையை இழந்து வாடும் அஜித்துக்கு இருவரும் ஆறுதல் கூறியுள்ளனர். இருவருமே ஒரே காரில் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

அஸ்தி கரைக்கப்பட்டது
அஜித்தின் தந்தை மறைவுக்கு முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அஜித் தந்தையின் அஸ்தி சென்னை ECR கடற்கரையில் கரைக்கப்பட்டதாக அவரது அண்ணன் அனில் குமார் நேற்று ட்வீட் செய்திருந்தார். சிலர் காசிக்குச் செல்கிறார்கள்; இன்னும் சிலர் அருகிலுள்ள கரையில் அஸ்தியை கரைக்கின்றனர். 3 தலைமுறையினர் இணைந்து எங்கள் தந்தைக்கு காரியம் செய்தோம் எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்கள் உருக்கம்
தந்தை உயிரிழந்த உடனே அஜித் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில், தங்களது தந்தை உயிரிழந்தது குடும்ப நிகழ்வாகவே இருக்க நினைக்கிறோம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அஞ்சலி செலுத்துவதற்காக ரசிகர்கள் நேரில் வரவேண்டாம் என மறைமுகமாக கூறும் விதமாக அஜித்தின் அறிக்கை இருந்தது. இதனை புரிந்துகொண்ட ரசிகர்கள் அஜித்தின் வீட்டிற்கும் அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்துக்கும் செல்லாமல் அமைதிக்காத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications